முகிலே!! உன் முகவரி என்ன-16

மாளிகையின் மாடியில் முழு பௌர்ணமியில் விஜயேந்திரன் உடலும் உள்ளமும் கொதித்துக் கொண்டு இருந்தது. நிச்சயம் அது கோவத்தால் அல்ல… தீராத தணியாத தபத்தால்… இத்தனை நாள் பாடுப்பட்டு அடக்கி வைத்த ஆண்மை அவள் அருகில் ஆடி நிற்க, என்ன முயன்றும் அடங்க மறுக்க… அவன் என்ன செய்வான்? பாவம் அவனுக்கு அவள் காதல் அன்றி கட்டி அணைக்க விருப்பம் இல்லை… ஏதோ அப்போ கீழ கட்டில்ல என்ன தாய கட்டையாக உருட்டி விளையாடினான்…

இல்லை, நிச்சயம் பல நாட்களாக துடிக்கும் அவன் ஆண்மைக்கு நொறுக்கு தீனியா என்பது அவன் மட்டுமே அறிவான்…

“என்னடா நல்லவனே, இந்த நேரத்துல நம்மள வர சொல்லி இருக்கான்… ஒருவேளை முதலிரவு மேட்டர்ல எதாவது சந்தேகம் இருக்குமோ, அதனால நம்மள வர சொல்லி இருப்பானோ…?” என பேசத் தெரியாமல் பேசி மாட்டிக்கொள்ளும் வீரைத் தட்டி கேட்க…

“டேய் நீ ஓவரா பேசுற… ஒன்னுமே தெரியாமல் தான் அவன் ஒரு குழந்தையை பெத்து வச்சி இருக்கானா? கம்முனு நில்லு, வீணா பேசி அவன் கிட்ட வாங்கி கட்டிக்காத…!!” மகேன் எச்சரிக்க…

சரி சரி…!! எனத் தலை ஆட்டியவன், வாயை அடக்க அவனைப் படைத்தவனாலும் முடியாது என்பதையும், சிறிது நேரத்தில் காண்பிப்பான் என்பதையும் தெரியாமல் போனது மகேனுக்கு…

விஜயனின் தலையைக் கண்ட பின்பு… “டேய் நல்லவனே, எதுக்கு அவன் நம்மள வரச் சொன்னான்னு கேட்டுச் சொல்லுடா…??” என வீர்…

“ஏன் உனக்கு வாயில்ல? அதை நீயே அவன் கிட்ட கேட்கிறாய்…??” மகேந்திரன்

“நான் அவன் மேல செம கோவத்தில இருக்கேன் டா… அதனால் நான் அவன்கிட்ட பேசமாட்டேன்… அதனால நீயே கேட்டுச் சொல்லு…!!” என முறுக்கிக் கொண்டு நின்றான் வீர்…

“என்ன கோவமாம் கொய்யாவுக்கு…??” என விஜயேந்திரன் கேட்க…

அதற்குப் பதில் சொல்லாமல் மூஞ்சியை உர்ரென்று வைத்துக் கொண்டு இருந்தான் வீர்… கேட்டால் கோபம் என்பான், ஆனால் பார்க்கச் சகிக்கவில்லையே…

‘டேய், அவன் தான் கேக்குறான்ல, எதுக்கு இப்போ நீ முறுக்கிவிட்ட மூஞ்சூர் மாதிரி நிக்கறாய்…!!” என மகேன் கலாய்க்க…

“பின்ன என்னடா இந்த ரெண்டு நாளா இந்த ஊரே நம்மள ஏதோ ரேப்பிஸ்ட் மாதிரி பார்த்துச்சு? பத்தாதக்கு பல்லு போன கிழவி கூட என்னை பார்த்தா இழுத்து கழுத்து வரை போத்திக்கிட்டு நாலு கெட்ட வார்த்தையில வேற வஞ்சிட்டு போகுது, எல்லாம் எதனால இவனால… இதுல இவர் வேற நம்ம குற்றவாளி மாதிரியே நிக்க வச்சு கேள்வி எல்லாம் கேட்டாரு… அதுக்கு எல்லாம் என்ன சொல்ல போறாராம்…!!!” என வீர் கேட்ட கேள்வி நியாயம் என்பதால் மகேன் மௌனமாகி போனான்…

விஜயேந்திரன் தன் உடன் பிறந்த இருவரையும் அமைதியாகப் பார்த்து நின்றவன், பின் பெருமூச்சு ஒன்றை எடுத்துவிட்டு…

“ப்ச், நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் நடக்கலடா. இப்போதைக்கு பிரச்சனையை ஒத்திப்போட தான் தாலி கட்டினேன்…!!!” என விஜயேந்திரன் கூற…

“என்னடா சொல்ற…!” என மகேன்

“அப்போ அந்த குழந்தைக்கு நீ அப்பா இல்லையா…?” என வீர் ஆர்வமாக கேட்க…

“அந்த குழந்தைக்கு முகில் அம்மாவா இருந்து இருந்தா, நிச்சயம் நான் அப்பாவா இருந்து இருப்பேன்…!” என விஜயேந்திரன் தான் கண்டெறிந்த உண்மையை கூறினான்… ஆம், அவள் கன்னி என கண்டறிய அவனுக்கு எந்த மருத்துவ அறிக்கையும் தேவையில்லை… அவள் குழந்தையோடு வந்தாலும் பரவாயில்லை, அந்த குழந்தையையும் அவனுடையதாக ஏற்க துணிந்தவனுக்கு… அவள் தொட்டால் கூசி சுருங்கும், தொட்டால் சிணுங்கும் தேகமும், பிள்ளைப்பேறு சுமந்ததற்கு அடையாளமே இல்லாத அவள் ஒட்டிய ஆலிழை வயிறும், அதற்கு சாட்சி கூற வேறு என்ன வேண்டும்… அப்பொழுதே கண்டு கொண்டு விட்டான் அவள் கன்னித்தாய் என்று…

“ஓ அப்படியா… இரு எதே முகிலா, அது யாருடா? என்னங்கடா புதுசு புதுசா கிளப்புறீங்க…!!” என வீர் அலறியது விஜயனைச் சிரிக்க வைத்தது.

“என்னடா சொல்ற…?” என மகேன் விஜயேந்திரனின் தோளைத் தொட…

“ம்ம்ம்…!!” என்றவன் அவன் கையில் இருந்த காகிதத்தைக் கொடுக்க, அது யாது நந்தினி கையெழுத்து வாங்கி கொடுத்த காகிதம்; அதில் கோணலாக எழுத்துகளில் ‘முகிலினி’ என கையெழுத்து போட்டு கொடுத்து இருந்தாள் நம்ம அல்லி ராணி…

“எப்பா டேய், அப்போ அவங்க பேரு தென்றல் இல்லையா, முகிலினியா? சபாஷ் டேய், எனக்குத் தலை சுத்துதுடா! எவனாவது இங்க என்ன நடக்குதுனு தெளிவா சொல்லுங்கடா…??” என வீர் தலையில் கை வைத்து உட்கார்ந்து விட…

“இப்போ அடுத்து என்ன…?” என கேள்வியாக மகேன் விஜயேந்திரனைப் பார்க்க…

“தென்றலைக் கண்டுபிடிக்கணும்…!!!” என…

“எது இதுக்கு மேல தான் தென்றலையே கண்டுபிடிக்கணுமா…?” என வீர் ஒரே நாளில் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி…

“டேய் சும்மா இருடா…!” என வீரை அடக்கியவன்…

“அப்புறம்…?” என நிதானமாக மகேன் விஜயேந்திரனைப் பார்த்து கேட்க…

“தென்றலை ஏமாத்துபவனையும் கண்டுபிடிக்கணும்…!!” விஜயேந்திரன்

“எது அது வேறையா…?” வீர் அடங்காத தடியன்…

“சாவு, அவங்கள ஏமாத்துனது யாருன்னு உனக்கு தெரியுமா…?” மகேன்…

“ம்ஹும் தெரியாது, ஆனா அவன் கையில தேள் வரைப்படம் இருக்கும் மட்டும் தெரியும்…!!!” விஜயேந்திரன்

“சரி அவனையும் கண்டுபிடிச்சிடுவோம், வச்சுக்கோ. அதுக்கு அப்புறம் என்ன செய்யப் போற…? தெரியாம தான் கேக்குறேன், எதுக்கு இந்த வேலை நமக்கு…?” என மகேன் விஜயனை ஆழமாகப் பார்க்க…

“என்னடா நல்லவனே லூசு மாதிரி பேசுற… அந்த குழந்தைக்கு அப்பா நம்மள்ள யாரோன்னு தான் அந்தப் பிள்ளை நினைச்சிட்டு இருக்கு. அது பொய்னு நிரூபிக்க வேணாம்… நம்ம மரியாதை என்ன ஆகுறது? ஐயா பேரை காப்பற்ற வேணாம்…!!” என வீர் பொங்க… (இவனுக்கு இவ்வளவு அறிவு எல்லாம் கிடையாதே, என்ன மாயம், யார் வச்ச சூனியம்!)…

“அப்படியாடா பெரியவனே, அது மட்டும் தான் காரணமா…?” என கேள்வியாக விஜயனைப் பார்த்தான்…

அவன் பதிலுக்கு ஒரு புன்னகையை உதிர்க்க… அதுவே மகேனிடம், அது மட்டும் காரணம் இல்லை என்று தெரிந்து கொடுத்துவிட்டது…

இவ்வாறு மூவரும் கூட்டாகச் சேர்ந்து குற்றவாளியைக் கண்டுபிடிப்பது எப்படி என்று கூட்டம் நடத்த விதியோ, இவர்களில் விஜயனைப் பார்த்து கைதட்டிச் சிரித்தது…

பொழுது புலர்ந்து விட்டதன் சாட்சியாக, வான மகள் இருளைத் துறந்து வெளிச்சத்தை உடுத்திக் கொள்ள, அவள் உச்சியில் ஒய்யாரமாக வலம் வந்தான் சூரியன்…

விடிந்ததிலிருந்தே முகிலை ஒட்டித் திரிந்தான் ரஞ்சன்…

அவனைப் பார்க்கப் பார்க்க உள்ளுக்குள் புகைந்து கொண்டு இருந்தது இரு ஜீவனுக்கும்… யாரா..?? எல்லாம் குறிஞ்சிக்கும் வீர்க்கும் தான்… பின்னே இதைப்பற்றி விஜயனிடம் கூறினாள், “என் பொண்டாட்டியைப் பற்றி எனக்குத் தெரியும். தேவையில்லாத வேலையைப் பார்க்கிறதை விட்டுவிட்டு, ஏதாவது வேலைப் பாருங்க…!!” என முகத்தில் அடித்தது போல் கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்…

இவர்களுக்குத்தான் பெருத்த அவமானம்; அந்த கோபம் எல்லாம் ரஞ்சன் பக்கமே திரும்பியது…

“மலைமாடு…?”

“சொல்லு குள்ள வாத்து…!!”

“இவனைப் பார்த்தாலே எனக்குப் பல ஆத்திரங்கள் வருது…!!!”

“அதே தான் எனக்கும்… ஆள் பார்க்கச் சப்பையா இருந்தாலும் கிளாமரல என்னையே ஓவர் டேக் பண்றான்… இவனை காலி பண்ணா தான் என் கெத்து காப்பாத்திக்க முடியும்… இல்லனா ஊருக்குள்ள ஒரு பொண்ணு கூட எனக்கு உஷார் ஆகாது…!!” என வீர் தீவிரமாகச் சொல்ல…

“…உன் மூஞ்சிய நானே இவனை விட்டா பெரிய அத்தான் வாழக்கையில குத்து விளக்கு ஏத்தி விட்ருவானோனு பயத்துல இருக்கேன்… நீ வேற கடுப்ப கிளப்பிகிட்டு…!!” என குறிஞ்சி வீர் மண்டையில் ஒரு கொட்டு வைக்க…

“ஸ்ஸ்ஹா… எருமை வலிக்குதுடி… சரி இப்போ என்ன பண்ணலாம் சொல்லு…??” என வீர் தலையைத் தேய்த்துக் கொண்டே கேட்க…

“இவனை எதாவது பண்ணியே ஆகணும், தடியா ஒரு ஐடியா கொடு…??” குறிஞ்சி…

“இரு யோசிக்குறேன்…?” என்றவன் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு, அருகில் கிடந்த வெண்கலப் பூ ஜாடியைக் காண்பித்து, “இதை வச்சி அவனை பிளந்துடுவோமா…!!” எனச் சொல்ல, அவள் ஆமோதிக்க…

வீர் அந்த ஜாடியைத் தூக்க, “ம்ஹும்… முடியல முருகேசா! அது ஆயிரம் காலத்து பழைய வெண்கலப் பொருள், கலப்படம் இல்லாதது. பார்க்கச் சாதாரணமாக இருந்தாலும் எடை அசாதாரணமானது,” அதனால் தூக்க முடியாமல் வீர் தள்ளாட…

“த்து… நீயெல்லாம் பயில்வான்னு வெளிய சொல்லிக்காதே, இதுல எய்ட் பேக் வேற… உன்னை கேட்டதுக்கு நானே எதாவது பண்றேன்…!!” என்றவள், வெளியே தண்ணீர் வாலியில் பூ அலங்காரத்தின் நடுவில் அழகுக்காக வைக்கப் பட்ட விளக்கைக் கவனித்தாள். அவள் மூளை அதிவேகமாகச் செயல்பட்டு ஒரு யோசனை கொடுக்க… கண்கள் பளிச்சிட அந்த விளக்கில் இருந்த எண்ணெயை எடுக்க…

ஏய் குள்ள வாத்து, எதுக்குடி இந்த எண்ணெய்…??

“ஷ், கம்முனு வாடா கர்லா கட்டை தடியா…!!” என்றவள், ரஞ்சன் தனியே வரும் வழியைப் பார்த்து நிற்க…

அவளுக்குத் துணையாக வீர் வந்தான்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top