வானில் கண்டம் விட்டு கண்டம் தாவும் பறவைகளோடு, மக்களைச் சுமந்து சென்றது ஜெட் விமானமும்….
ஜன்னல் ஓரத்தில் தனஞ்ஜெயன் அமர்ந்து இருக்க, அவனுக்கு அருகில் அப்பாவியாக…
“எலி தான் கடிக்கிறது, எலிப்புழுக்கை எதுக்குடா கடிக்கிறது…?” என மனதில் நினைத்தபடி நிரஞ்சன் அமர்ந்து இருந்தான்…..
“ம்ம், சென்னையிலிருந்து நியூயார்க் போக உதவி செய்த ஸ்ரீக்கு விழுந்த அதிதியில் பாதியாவது… தேனிலிருந்து சென்னைக்குக் கூட்டிட்டுப் போனவனுக்குக் கொடுக்காமல் அவனைச் சும்மா விட்டா எப்படி…?” என நிரஞ்சன் நினைத்ததற்கு தனஞ்ஜெயன் பதில் கூற…
அந்தரத்தில் மின்னல் தாக்கியது போல அதிர்ச்சியில் வாயைப் பிளந்தான் நிரு…
“அ… அண்ணா… அது… நான்…” என மாட்டிக்கொண்ட பயத்தில் பேச முடியாமல் திக்க…
“நீயே சொல்லு…” என்பது போல் அமர்ந்து இருக்க…
பிளைட்னு கூடப் பார்க்கலையே கபால்ன்னு அங்கேயே காலில் விழுந்து விட்டான்……
“அண்ணா சாரி அண்ணா, நான் தான் அவளை சென்னைக்கு அனுப்பி வச்சேன்…. கைல விஷ பாட்டில் ஓடி வந்து நின்னதும் ஒன்னுமே ஓடல அண்ணா…… அதான் அவ விருப்பப்படியே அனுப்பி வச்சிட்டேன். உங்ககிட்ட சொல்லாதது என் தப்பு தான் அண்ணா, மன்னிச்சுடுங்க….!!” என கெஞ்சியவனைப் பார்த்து….
“இது தான அந்த விஷ பாட்டில்….!!!” என நான் கேட்டேன்….
கடுகாக இருந்த அவன் கண்கள் கூமுட்டையாக விரிந்து, தலை ஆம் என்றிட…
“சரி, அப்போ இதை நீயே குடி…!” எனச் சொன்னேன்…..
பாவம், விஷத்துக்குப் பதில் அவன் உயிர் ஹார்ட் அட்டாக்கில் சென்றுவிடும் போல் இருந்தது…. அந்த அளவுக்கு ஷாக் அவன் எதிர்பார்க்கவில்லை
“கடங்காரிய கூட இருந்தாலும் கொல்றா… தள்ளி இருந்தாலும் கொல்றளே இவளுக்கு! மாமனா பொறந்ததுக்கு பதில் நான் வேற எங்கயாவது போய் சர்க்கஸில் சிங்கமே மேய்க்கற வேலைய பார்க்கலாம் போலயே….!!” என உள்ளுக்குள்ளே நொந்து கொண்டிருக்க….
“அதுக்கு சர்க்கஸில் முதல்ல சிங்கம் இருக்கணும்…!!” என்றவனைத் திடுக்கிட்டுப் பார்க்க…
“நீயா குடுக்குறியா இல்லை உன் வாயைத் திறந்து ஊத்தி விடுவா..!!” என மிரட்டல் தனாதீடம் இருந்து வர….
“வேணாம்னா உன் கையால என்ன கொன்ன பாவம் உங்களுக்கு வர வேணாம், குடுங்க நான் உன்னை குடிச்சுட்டு சாகுறேன்….!!” என பக்கம் பக்கமாக சமுத்திரம் பட டயலாக் பேசி விட்டு, அப்பாவியாக தனஞ்ஜெயன் முகத்தைப் பார்க்க….
அவன் கையில் இருந்த மேக்ஸின்ல் மூழ்கி விட….
“ரைட் இன்னிக்கு டெத் கன்பார்ம்…!!” என கண்ணை மூடிக்கொண்டு விஷ பாட்டிலை வாயில் சரிக்க…
“க்க்க.. ஹக்க..” எனத் தொண்டையைப் பிடித்துக்கொண்டு இரும்பியவனுக்குத் தண்ணீர் பாட்டிலை கொடுக்க…
வாங்கி குடித்துவிட்டு…
“அண்ணா கபசுரகுடிநீராஆஆ…!!” என கசப்பு தாங்காமல் இரண்டு தண்ணீர் பாட்டிலையும் காலி செய்துவிட்டு, ஏரோஸ்டர் கையால் நான்கு ஜூஸ் வாங்கி குடித்தான்…
“ஓ போன தடவை தேன், இந்தத் தடவை கபசுர குடிநீரா…!!!” எனத் தனக்குள் சொல்வது போல் சொல்ல…
“அடிப்பாதகத்தி…. உன்னை நம்பி அனுப்பிவிட்டதுக்கு என்ன வச்சு செஞ்சுட்டாளே…. ஐயோ…. இப்போ அனுப்பி விட்டதுக்கு கூட அடிக்க மாட்டான்…. ஏன்டா அவகிட்ட ஏமாந்தன்னு அடிப்பான்…..!!!” எனத் தனா வைப் பார்க்க, அவன் இவனைத்தான் கேவலமாகப் பார்த்துக்கொண்டு இருந்தான்…
“பிளைட் தரையிறங்குனதும் நமக்கு சங்கு கன்பார்ம்….!!” என நினைக்க…
“ஆமா…. கன்பார்ம்…!!” எனப் பதில் தனஞ்ஜெயனிடமிருந்து வந்தது…
“ஆத்தி மனசுக்குள்ள நினைக்கிறது கூடவா அப்படியே சொல்வாரு…!!” என அவன் பீதியில் உறைய…
“நீ நினைக்காததையும் சொல்வேன், அந்த வாய மூடு கொசு உள்ளே போகுது..!!” என்றதும்… கலக்கம் அடைந்தவன் சிறிது நேரத்தில் தெளிந்து சிரிக்க ஆரம்பித்தான்….
“ஏன்டா சிரிக்கிற…?”
“அதான் நினைக்கிறதே உங்களுக்குத் தெரியுமே, நான் என்ன நினைக்கிறேன் என்று சொல்லுங்க பார்ப்போம்…?” சவால் விடும் தொனியில் கேட்க….
“ஏமாந்த உனக்கு இப்படின்னா, ஏமாத்திட்டு போனவளை சும்மா விடுவேனா என்று நினைத்ததானே…!!” என சரியாகச் சொல்லி நிரஞ்சனை மீண்டும் ஆச்சரியத்தில் தள்ளி விட்டான்
“ஆத்தி வெரி டேஞ்சரஸ் ஃப்ளோ….!!” என அமைதி ஆகிப் போனான்…..
காலையில் எழுந்ததில் இருந்து மதுராவின் மனதில் புதிய படபடப்பு தொற்றிக்கொண்டது….
காலையில் எழுந்ததிலிருந்து அலுவலகம் செல்வது வரை அனைத்தும் தாமதமாக நடந்ததால் வந்த படபடப்பாக இருக்கும் என அவள் நினைத்துக்கொண்டாள்….
அதேபோல் அலுவலகமும் இன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது; எந்த அளவுக்கு என்றால், அவள் தாமதமாக வந்தாலும் கவனிக்காமல் அனைவரும் மிகவும் பிஸியாக இருந்தனர்….
“என்ன??” என ஜெடனிடம் விசாரிக்க….
அவன் இன்று அவர்கள் முதலாளி வருவதாகக் கூறிவிட்டு பறந்து சென்றுவிட்டான்….
அலுவலகத்தில் அனைவரிடமும் பேசினாலும், ஜெடன் இடம் மட்டும் அவளுக்கு நட்பாக இருந்ததற்குக் காரணம்… அவளை அவளாக ஏற்றுக்கொண்டதுதான்….
வந்த புதிதில் அவளை “Will you date with me..?” என்றவர்களை… “Sorry, I am married…!” என்று கூறி ஒதுக்கி வைத்தவள்….
ஆம், அவள் திருமணம் ஆனதை யாரிடமும் மறைக்க விரும்பவில்லை….
ஆனால் “வில் பி அ பிரண்ட்..?” என வந்த ஜெடனையும் ஒதுக்க முடியவில்லை…. அவன் நட்பை ஏற்றுக் கொண்டாள்….
அவள் பின்புலத்தைப் பற்றி துருவித் துருவித் கேட்காமல் அவளுடன் நட்பு பாராட்டி வருகிறவன் மீது தனி மதிப்பு உண்டு…..
“இந்த கம்பெனியின் முதலாளி யார் ஜெடன்..!” என வந்த புதிதில் ஒரு முறை கேட்ட பொழுது…..
“அவர் பெயர் ஜெய்… அவர் இப்போது பர்சனல் ஒர்க் விஷயமாக இந்தியா போய் இருக்கிறார்….!! எப்போது வேண்டுமானாலும் திரும்பி வரலாம்….” என்பது வரை கூறி இருந்தது நினைவுக்கு வர….
“யார் வந்தாலும் நமக்கு என்ன…?” என வழக்கமாகத் தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விட்டாள்…
சிறிது நேரத்திற்குள்ளே அலுவலகத்தில் சலசலப்பு சத்தம் கேட்டு அடங்கியது…..
அதன் பின் கொஞ்ச நேரத்திலே கம்பெனி செக்ரட்டரி லிசா வந்து, புதிதாக வேலைக்கு சேர்ந்த புதிய பணியாளர்களை முதலாளி அழைப்பதாகவும், மீட்டிங் ஹாலிற்கு வருமாறு மிடுக்காகச் சொல்லிவிட்டுப் போய் பூனை நடை போட்டுச் சென்றாள்….
மதுரா ஜெடன் உட்பட அனைவரும் வந்து குழுமியிருக்க….
அவர்களைப் போல் புதிதாக பணியில் சேர்ந்த மற்ற நபர்கள், முதலாளி ஜெய் அழகு அறிவு அப்படி.. இப்படி… என அவர்கள் கொடுத்த பில்டப்பில்….
எதிலும் ஆர்வம் இல்லாத நம் மதுராவிற்கே…..
“யார் சாமி அந்த ஜெய்? எனக்கே பாக்கணும் போல இருக்கே…?” என நினைத்துக்கொண்டே, ஜெய்க்காகக் காத்திருக்க…
சிலபல முகஸ்துதிகளுடன் மிஸ் லிசா ஜெயையை அறிமுகப்படுத்த…
கண்கள் விரிந்து இருக்க, அவள் வாயில் ஒரு முழு டைனோசர் போகும் வண்ணம் திறந்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவளது இதயம் எம்பி குதித்து குத்தாட்டம் போட்டது…
அப்படினா… எஸ், அதே அதே ஹீரோ என்ட்ரி தான் மக்களே…
“ஹிட்லர் மாமா…” என வாய்க்குள்ளே முனகி, மயங்கி தரையில் சரிந்து விழுந்தாள்…
பாவம் பிள்ளை, இனி மயங்கி மயங்கி விழுவாள்; அதுவும் நம் ஜெய் என்கிற தனஞ்ஜெயனால் என்றால் மிகையல்ல…
மயங்கும் அவளை இமைக்காமல் பார்த்தவன், நிதானமாக அவள் அருகில் வந்து, அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்…
அருகில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து அவள் முகத்தில் ஊற்ற, அனைவரும் திகைத்தனர்…
“அம்மா.. ஆ..!” என அலறியபடி எழுந்தவளை நக்கலாகப் பார்த்துக்கொண்டே…
‘சில் கையிஸ்… சின்னதா ஷாக் டிரீட்மென்ட்… எங்க ஊர் ஸ்டைல்ல குடுத்தேன் அண்ட் இட் ஒர்க்ஸ்…!” என்றதும் அனைவரும் கைதட்டிப் பாராட்டினர்…
அவள் காது அருகே குனிந்து தமிழில், “கேவலமா நடிக்காத நாயே… என்ன வேலைக்கு எப்படி எப்படி தில்லாலாங்டி வேலை பார்ப்பேன்னு உன்னை விட எனக்கு நல்லா தெரியும்…” என சொல்லிவிட்டுச் சென்றவனை…
பார்த்து முழி பிதுங்கி நின்றாள்…
இனி சரவெடி சரமாரியாக ஆரம்பம்…



