வெம்மை தரும் வெயிலோன் மறைந்து குளுமை நிறைந்த முழு நிலவும் வந்து வெளிச்சம் சேர்க்க, பளிங்கினால் ஆன அந்த மாளிகை அந்தப் பௌர்ணமி இரவில் பெயருக்கு ஏற்றது போல் அழகாக மிளிர்ந்தது “இந்திரபவனம்….!!”
“டேய் மடமடன்னு அந்த தோரணத்தைத் தூக்கி கட்டுங்கடா..!!” என கம்பீர குரலில் ஏவியபடி வந்தார் அந்த வீட்டின் மூத்தவர் வீர பாண்டியன்…
அதுவரை மெத்தனமாக வேலை செய்தவர்கள் அனைவரும் துரிதமாகச் செயல் பட ஆரம்பித்தனர்….
“ஏலே முருகா நாளைக்கு விசேஷத்திற்கு வரவங்க தங்குறதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ண சொன்னேன், அதெல்லாம் பண்ணியாச்சா..!!” எனக் கேட்டபடி வந்தார் இளையவர் சுந்தர பாண்டியன்.
“அதுங்க ஐயா..!!” என அவர் பதில் அளிக்கும் முன்,
“ஏன்பா முருகா பந்திக்கு தோப்புல இருந்து வாழை இலை எல்லாம் வந்தாச்சா? அப்புறம் அரிசி, பருப்பு, எண்ணெய் எல்லாம் நம்ம குடோன்ல இருந்து இறக்க சொன்னேனே, அந்த லோடு எல்லாம் வந்தாச்சா..?? ” எனத் தொடர் வினாக்களை எழுப்பியபடி வந்தார் மாறன், அந்த வீட்டின் மருமகன்…
“என்ன மாப்பிள்ளை நீங்க போய் இந்த வேலையெல்லாம் செஞ்சுகிட்டு, அதுக்கு தான் நாங்க இருக்கோம்ல..!!” என வீட்டோடு மாப்பிள்ளையாக வந்திருந்தாலும் இன்றளவும் அவருக்கு அளிக்கப்படும் மதிப்பும் மரியாதையும் இம்மியளவும் குறைக்காமல் பார்த்துக்கொண்டனர் பாசமான மச்சான்கள்…
என்ன மச்சான் இது நம்ம வீட்டு விஷேசம் நாம செய்யாம யாரு செய்வா..?? ” என எங்கும் தனித்து சொல்லாமல் நாம் என சொன்ன மருமகனை நினைத்து பெருமிதம் கொண்டனர்.
செல்லமாக வளர்ந்து தங்கள் தங்கையை விட்டுப் பிரிய மனமில்லாமல் வீட்டோடு மாப்பிள்ளை தேட..(அட..சின்ன தம்பி குஷ்பூஉஉஉ..)
அப்பொழுது பாண்டியர்களின் இளவரசியை அதாவது அவர்களின் தங்கையை வெளியில் பார்த்ததும் தன் மனதை பறிகொடுத்த மாறன் பெண் கேட்டு வர இவர்கள், அவர்களிடம் சில நிபந்தனைகளை சொல்ல தாம்தூம் என குதித்தனர் மாறன் வீட்டினர்.. இத்தனைக்கும் அவர்களும் இவர்களின் அந்தஸ்தை விட மேலானவர்களே…
இருந்தும் தன் காதலை மறக்க முடியாமல்.. தன் பெற்றோரை சமாதானம் செய்து தன் காதலி என்னும் வெற்றி கனியை பறித்தார் இந்த மாறனும்… அன்று முதல் இன்று வரை தன் வீட்டோட மாப்பிள்ளையாக வந்ததற்கு வருத்தம் கொள்ளவில்லை.
“என்னடா நாங்க கேட்டுக்கிட்டே இருக்கும் நீ பாட்டுக்கு அமைதியா இருக்க..” என கேட்டது மூன்று சிங்கங்கள் ஒன்றாக உறுமுவது போலிருக்க..
பயத்தில் நாவறண்டு நின்றார் முருகன், அவ்வீட்டின் கடைநிலை பணியாள்…
“வாழை இலை இப்போதான் வந்துச்சுங்க தம்பி.. அரிசி பருப்பு எல்லாம் மத்தியானமே நம்ம குமரேசன் கொண்டுவந்து போட்டுட்டான்..!! அறை எல்லாம் சுத்தம் பண்ணி வரவங்க வந்து தங்கற மாதிரி ரெடியா இருக்கு கொழுந்தனாரே.….!!” என அவர்கள் கேட்ட அனைத்து தகவல்களையும் விரல் நுனியில் வைத்தபடி, தானே இந்த வீட்டின் மூத்த மருமகள் என கையில் தேனீருடன் வந்தார் சகுந்தலா…
“ஏப்பா தம்பிகளா வந்து தண்ணி குடிச்சிட்டு போயிட்டு சுறுசுறுப்பா வேலைய பாருங்க….!!” என அவர்களின் சோர்வை அறிந்து அன்னலட்சுமியாக வந்தவர்..(ஹிஹி..இது அது இல்லைங்கோ….)
கையில் மூன்று கப்புகள் அடங்கிய தட்டில் இருந்த தேனீரை அவ்வீட்டின் ஆண்களுக்கு அருந்தக் கொடுக்க..
“ஏனுங்க கொழுந்தனாரே நீங்க இன்னும் சாப்பிடாம இருக்கீங்கனு அங்க வேதா உங்களுக்காக காத்துட்டு இருக்கா..!!” என சொன்னவாறே தன் கணவருக்கான தேநீரை எடுத்து அவர் குடிக்கும் பதத்திற்கு ஆற்த்திக்கொண்டிருந்தார்.
“ஐயோ வெளியூருக்கு லோடு அனுப்புற அவசரத்துல அவ கிட்ட சொல்ல மறந்துட்டேன் அண்ணி..!!” என பரிதவித்தவர்.
“எத்தனை தடவை தான் அவளுக்கு சொல்றதுன்னே தெரியல அண்ணி.. உடம்புல பிரஷர் அது இதுன்னு வச்சிக்கிட்டு எனக்காக சாப்பிடாமல் காத்துட்டு இருக்கா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறா….!!” என சலித்து கொண்டவர் அண்ணன் முகத்தை பார்க்க..
தன் தம்பி அமைதியாக எதற்கு தயங்குகிறான் என்பதை அவர் முகத்தை பார்த்தே கண்டுகொண்டவர் “இங்கே எந்த முக்கியமான வேலையும் இல்லடா..!!”
வெறும் தோரணம் கட்ட வேண்டியது தான் பாக்கி. அதை நானும் மாப்பிள்ளையும் பார்த்துக்குறோம். நீ போ…!! என்றதும் சுந்தரபாண்டியனின் அன்பு மனைவியான வேதா என்கிற வேதவள்ளியைத் தேடி ஓடினார் அருமை கணவன்…
தம்பி சொல்ல மறந்துட்டேன், சின்னு உங்களைத் தான் தேடிட்டு இருந்தா…! என்றது தான் தாமதம்.
கவிகுட்டியா..!! எனக் கேட்டவர், மச்சான் இதோ வந்துடுறேன்..!! எனத் துள்ளிக் கொண்டு ஓடினார்…
தன் வயதை மறந்து துள்ளி ஓடும் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
என்ன சக்கு என்ன விஷயமா என்கிட்ட பேசணும்..? எனத் தன்னிடம் தனியாகப் பேசவே அவர்களை அனுப்பி வைத்த மனைவியை அறிந்து கேட்டார் வீர பாண்டி.
தன்னை அறிந்த கணவனை புன்னகை முகத்துடன் ஏறிட்டவர்.
அது நம்ம பெரியவனுக்கு வயசு ஏறிட்டே போகுது. அவனுக்கும் ஒரு கல்யாணம் பண்ணி வச்சா நமக்கு ஒரு நிம்மதியா இருக்கும்..!!
அது சரி தான்மா, அவனுக்குன்னு நேரம் கூடி வரணுமே..!!
அவனுக்கு என்ன நம்ம வேற வீட்ல இருந்தா பொண்ண எடுக்க போறோம்.. உங்க தங்கச்சி பொண்ணுதான்னு ஏற்கனவே முடிவு பண்ணது தானே.. அதான் அத்தைக்கும் மாமாவுக்கும் சஷ்டியப்தபூர்த்தி நடக்கும் போதே அவங்க கல்யாணத்தையும் முடிவு பண்ணிட்டாம்னா எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்…!! என தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிட்ட நிம்மதியில் நின்றார்.
சிறிது நேர யோசனைக்கு பின்பு, “நீ சொல்றதும் சரியாதான் இருக்கு. அப்பா அம்மா கிட்ட பேசிட்டு நல்ல முடிவா சொல்றேன்” என்ற கணவனை காதல் பொங்க பார்க்க..
“சக்கு இப்பவும் உன்னை திருவிழால பார்த்த மாதிரி அப்படியே இருக்குடி… என்ன அப்ப கிழங்கு மாதிரி இருந்த, இப்போ கொஞ்சம் சதை போட்டுட்ட…. இருந்தாலும் இப்போ தான் கும்முனு இருக்க….!!” என்றவர் மனைவியை ரசனையாக பார்த்தது..
“என்னங்க நீங்க வெளியில வச்சி பேசிகிட்டு இருக்கீங்க..!!” என சிணுங்கலாக சொன்னவர்..
“அப்போ உள்ள போய் வச்சிக்கலாமா..?” என தன் மீசையை திருகி கொண்டே கேட்டவரை ஏறிட்டு பார்க்க முடியாமல் சிவந்தவர்..
“சீ போங்க..!!” என தன் கன்ன சிவப்பை மறைத்து கொண்டு உள்ளே ஓடினார்..
தேக்கு மரத்திலான தடிமனான கதவைத் திறந்து கொண்டு மாறன் சென்றுக் கண்டது…
“ஷா லா லா
ஷா லா லா ரெட்டை
வால் வெண்ணிலா
என்னை போல் சுட்டி
பெண் இந்த பூமியிலா “
“என ஆடிக்கொண்டிருந்த கவிதாவைத்தான்..”
“ஹலோ ஹலோ இருங்க.. இன்ட்ரோ பாட்டுக்கு டான்ஸ் ஆடினா அது ஹீரோயினாதான் இருக்கணுமா என்ன..?? ஹீரோயின் அம்மாவாகக்கூட இருக்கலாமே..!!”
“எதே..??!! ஹீரோயின் அம்மாவா..!!?”
“ஹிஹி ஆமா மக்களே… ஏன்னா அவங்க கால்ஷீட் கொடுத்த ரைட்டர் அப்படி..!!”
“இப்போ புரிஞ்சிருக்குமே ஏன் அந்த அண்ணன்மார்கள் தங்கைக்கு வீட்டோட மாப்பிள்ளை பார்த்தாங்கன்னு…”
“அதற்காக பொறுப்பில்லாதவரும் அல்ல.. படிப்பில் மாஸ்டர்ஸ் வரை முடித்திருக்கிறார்.. செல்லமாக வளர்ந்ததால் குறும்புத்தனம் கொஞ்சம் அதிகம்.. (ஆமா கொஞ்சமே கொஞ்சம் தான் நம்புங்க..)”
அந்த குறும்பு தனமே மாறனை கவர்ந்தது..
லகுவான இரவு நேர ஆடையில் ஆடி கொண்டு இருந்த மனைவியை பின்னாக சென்று அணைத்தவர், அவர்கள் காதலுக்கு இடையூறாக இருந்த விளக்கையும் அணைத்தார் ஆசை கணவர்…
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தம பாளையத்தை பூர்வீகமாக கொண்டவரே அதிவீரராம பாண்டியன் – சிவகாமி தேவி…
இவருக்கு சொந்தமான நிலங்களையும், அரிசி ஆலைகளையும் மற்ற இதர விவசாயம் சார்ந்த தொழில்களையும் இவரது மகன்கள் மற்றும் மருமகன் ஆகியோர் பராமரித்து வருகின்றனர்..
அதிவீரராமபாண்டியருக்கு அறுபது வயது நிறைவடைந்ததை அடுத்து சஷ்டியப்தபூர்த்தி நாளை மறுநாள் நடக்க விருக்கிறது..
அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தனர்.. அதற்காகவே இப்பெரும் ஏற்பாடு..
மறக்காம எல்லாரும் வந்துடுங்க மக்களே..
நாங்க வருவது இருக்கட்டும் எங்க ஹீரோ ஹீரோயின் பத்தி கேக்குறீங்களா.. அந்த சோகத்தை எப்படி சொல்ல அட்வான்ஸ் வாங்கிட்டு எங்கேயோ தலைமறைவாகிடுச்சுங்க அடுத்த எபில தேடி பிடிச்சு இழுத்துட்டு வரேன்..



