காதல் செய்யாதே இராவணா-32

ராவணனின் ரத்தம் தோய்ந்த உடலைக் கண்டு சுழற்றி அடித்ததோ காற்றும், சூழ இருந்த கடலும் தன் பேரலை எழுப்பி ஓலமிட்டதோ…

மடியில் ஏந்திய ராவணனை நேர்குத்திய கண்களுடன், கலைந்த கேசமும் ரத்த பசையற்ற முகமும் கொண்டு கல் என சமைந்தவளின் விழிகளில் கசிந்த கண்ணீர் துளிகளே அவள் இன்னும் உயிருடன் இருப்பதாக சாட்சி சொன்னது…

மங்கை அவளின் பெருந்துயரைக் கண்டு கடவுளுக்கும் இரக்கம் சுரந்ததோ… இருண்ட வானைக் கிழித்துக்கொண்டு காதை செவிடாக்கும் சத்தத்துடன் விண்ணில் பறந்து வந்தது எந்திரப் பறவை…

துன்பத்தில் தவிக்கும் மானிடரைக் காக்கும் ரட்சகனாக… அந்த எந்திரப் பறவையின் கதவுகளைத் திறந்து கொண்டு தன் நீண்ட கால்களை எட்டி வைத்து வந்தவன்… தன்னோடு வந்த மெய்க்காவலருக்கு கண் அசைவில் கட்டளையிட…

எஜமானரின் கட்டளையை ஏற்று நொடியும் தாமதியாமல் ராவணனைத் தூக்கிக்கொண்டு சென்றனர். தங்களைச் சுற்றி நடக்கும் எதையும் கிரகிக்க முடியாமல் ராவணன் பின்னே மற்ற இருவரும் சென்றனர்.

அவர்கள் ஏறியதும், தன் பரந்த எந்திரச் சிறகால் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பறந்து சென்றது அந்த நவீன ரக இரும்புப் பறவை.

மும்பையில் பிரபல தனியார் மருத்துவமனையின் மேல் கூரையில் அவர்களைத் தாங்கி வந்து அமர்ந்தது ராட்சதப் பறவை.

அவர்கள் வந்ததும் அங்கே தயாராக இருந்த ஸ்ட்ரெச்சரில் ராவணனைப் படுக்க வைத்துத் துரிதமாகச் செயல்பட்டனர்.

“சீக்கிரம் சீக்கிரம் ஆபரேஷன் தியேட்டரை ரெடி பண்ணுங்க!”

“டாக்டர் அர்ஜுன் பார்க்குற பேஷண்ட வேற யாரையாவது அட்டென்ட் பண்ண சொல்லுங்க.. அர்ஜுன இந்த எமெர்ஜென்சி கேஸ உடனே பார்க்க சொல்லுங்க…கம் ஆன்… குயிக்…!” என தொடர் ஆணைகளைப் பிறப்பித்த வண்ணம் ஆறடி உயரத்தில் கட்டுடல் அழகான இருபதுகளில் இருக்கும் வேந்தனவன்.

சக்ரவர்த்தி குரூப்ஸின் முதன்மை வாரிசு…மற்றும் இந்த மருத்துவமனையின் எம். டியுமான ஆதிரன் சக்ரவர்த்தி…(உன்மத்தம் ஆகுதடி சகியே… நாயகன்… ஹிஹி என் கதைல ஹீரோஸ் கெஸ்ட் பண்ணலனா எப்படி…)

தலைமையிடமிருந்து வந்த அவசர அழைப்பை நிறைவேற்றவென விரைந்து வந்தான். அம்மருத்துவமனையின் தலை சிறந்த மருத்துவருள் ஒருவரான டாக்டர் அர்ஜுன், மின்னலென வந்தவன் தன் கடமையை செய்தான் வல்லமை பெற்ற மருத்துவ நிபுணன்.

பல மணி நேரம் தீவிர சிகிச்சைக்கு பிறகு ராவணன் உடலில் இருந்த தோட்டாக்கள் அகற்றப்பட்டு உயிருக்கு ஆபத்தில்லை என்றான நிலையில் அவனை தனி அறைக்கு மாற்றினர்.

தன் எதிர்பார்ப்பு மொத்தத்தையும் முகத்தில் தேக்கி வைத்து ராவணனை பார்த்துவிட துடித்துக் கொண்டு இருந்த மகிழை காக்க வைக்காமல் வந்து சேர்த்தான் அவளின் ராவணன்.

அத்தான்….!! என உயிரை கையில் பிடித்து கொண்டு ஈனஸ்வரத்தில் அவன் செவிமடலுக்கு நோகுமோ என்ற அச்சத்தில்…

மூடியிருந்த விழிகளுக்குள் கருமணிகளின் அசைவு தெரிய.. அவனிடம் நெருங்கி அமர்ந்து..

“எனக்கு பயமா இருக்கு கண்ண திறந்து பாருங்க. அத்தான்…!!” என வெகு அருகில் கேட்ட மகிழினியின் குரலில் மெல்ல இமைகளை பிரித்து இன்னதென்று அறிய முடியாத பார்வையை பார்க்க…

உன் சுவாசம் ஒன்றே போதுமடி..

அந்த மரணத்தையும் வெல்ல..!!

என்னை தழுவ வரும் காலனையும்…

கொல்வேனடி….!!

நம் நேசத்தின் பலம் கொண்டு…

எதிர்வரும் அத்தனை ஜென்மமும்….

உன்னை மட்டும் காதல் செய்வேனே…!!”

தன் சக்தி மொத்தத்தையும் ஒன்று திரட்டி..

“சிட்டு..!!” என அழைத்தவன் மீண்டும் மயக்கத்திற்கு செல்ல பதறி வளவனை அழைக்க…

அவன் மருத்துவரை அணுக… ராவணன் மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த துயிலில் இருப்பதாகக் கூற, அவனைத் தொந்தரவு செய்யாமல்… ராவணனைக் காத்த ரட்சகனிடம் நன்றியினை நவில…

“இருக்கட்டும்… மிஸ்டர் வளவன்… எங்களுக்குச் சொந்தமான கப்பலில் ஃபாரின் டெலிகேட்ஸ் கூட மீட்டிங்கில் இருந்தபோது துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு என் கார்ட்ஸ் மூலம் என்னவென்று தெரிந்துகொண்டேன்… அப்படியே தொலைநோக்கி கருவி மூலம் பார்க்கும் போதுதான் அவர்கள் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கொண்டு விழறதும் அப்புறம் இவர்கள் கதறி அழறதும் பார்த்து ஏதோ அவசரம் என்று புரிந்துகொண்டேன்…” என மகிழை சுட்டிக் காட்டியவன் தொடர்ந்து…

வந்து பார்த்தபோது தான் தெரிஞ்சுகிட்டேன் அடிபட்டு கிடந்தது ராவணன் ஐ. பி. எஸ்.. ன்னு. அவரு எங்க வீட்டு பொண்ண பெரிய ஆபத்துல இருந்து காப்பாத்தி இருக்காரு. அவருக்கு நான்.. இல்ல எங்க குடும்பம் மொத்தமும் நன்றி கடன்பட்டிருக்கோம்… அந்த நன்றி கடனை திருப்பி செலுத்த கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திகிட்டேன்.. சோ.. இதுக்கு நீங்க நன்றி சொல்ல தேவையில்லை… என்றவன் தன் மணிக்கட்டில் அணிந்திருந்த உயர்ரக கை கடிகாரத்தை பார்த்தவன்..

“ஓகே கைஸ்.. எனக்கு இப்போ முக்கியமான வேலை இருக்கு… டாக்டர்ஸ் கிட்ட பேசிட்டேன் அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை சோ கவலை படாதீங்க… என் ஹாஸ்பிடல்ன்னு சொல்லல… இங்க இருக்குற டாக்டர்ஸ் உண்மையாவே திறமை வாய்ந்தவங்க… அவங்க பார்த்துக்குவாங்க… எனக்கு இன்னும் டூ டேஸ்ல கல்யாணம் சோ எனக்கு நிறைய வேலை இருக்கு.. ராவணன் கண் திறந்ததும் வந்து பார்க்குறேன் சரியா.. நான் வரேன்..!!” என புறப்பட்டவனை நோக்கி இருகரம் கூப்பி கண்ணீர் மல்க நன்றியினை தெரிவித்தனர்.. இருவரும்…

அவன் செய்தது ஆக பெரும் உதவி அல்லவா…

இரண்டு நாட்கள் கழித்து படுக்கையில் சாய்வாக அமர்ந்து மகிழினி போட்டுக் கொடுத்த ஆரஞ்சு ஜூஸைக் குடித்தபடி இருந்தவனைக் காதில் புகை வரும் வண்ணம் பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வளவன் பின்னே…

நிறைமாத கர்ப்பிணியான அவன் மனைவி ராவணனுக்கு ஹார்லிக்ஸ் கலக்க, மகிழினி குழந்தையைப் போல் அவனுக்கு ஜூஸைப் புகட்ட, சிந்திய ஜூஸை வடிவு தன் முந்தானையில் துடைக்க, ராஜதுரை அவன் கால்களை அமுக்கி விட, சிவசங்கரன் அந்தக் குளிரூட்டப்பட்ட அறையிலும் அவனுக்கு விசிறி விட இப்படி சுற்றி அனைவரின் ராஜ உபசரணையில் திளைத்தவனைப் பார்த்து…(புகைதான் செய்யும்).

“திண்ணையில் கிடந்தவனுக்கு”

“திடுக்குன்னு வந்துச்சாம்”

“வாழ்வுங்கிற மாதிரி இவன் பண்ற அழிச்சாட்டியம் தாங்க முடியல நாராயணா..!!!” எனப் புகைந்தபடியே ஒரு கையால் அவனுக்கு ஆப்பிளை நறுக்கிக் கொண்டிருந்தவன் தோள் பட்டையில் மற்ற கை தொட்டில் போடப்பட்டு இருந்தது…(சொம்பு நிறைய அடி வாங்கி இருக்கும் போலயே..).

அங்க என்ன புலம்பல், கொடுத்த ஒரு வேலையக்கூட உருப்படியா பண்ண மாட்டீங்களா..!”என கடிந்தவாறே வளவன் கையில் இருந்த பழத் தட்டை பிடுங்காத குறையாக எடுத்துச் சென்றாள் அவன் மனையாட்டி…

உனக்கு வந்த நிலைமையைப் பாருடா வளவா… உன்னைக் கண்டுக்கக்கூட மாட்டேங்குறாங்களே… ம்ம்ஹும்… இந்த உலகமே இப்படித்தான் போல…!!”என சுயபச்சாதாபம் கொண்டவன் முன்னால்.. நீட்டப்பட்டது.. ஆப்பிள் ஜூஸ் அவனின் செல்வ சீமாட்டியிடம் இருந்து…

கண்களால் காதலை கசிந்தவாறே வாங்கிப் பருகியவன் விழிகளும் பழச்சாற்றுடன் மனைவியையும் பருகியதோ…!!!

உனக்கு மட்டும் ஏன் தான் இத்தனை கஷ்டமோ தெரியலைப்பா… அறியா பருவத்துல உங்க அப்பாவ சரியா புரிஞ்சிக்காம அவரத் தண்டிக்கிறேன்னு உன்னையும் சேர்த்து தண்டிச்சிட்டேனே, இந்த பாவிய மன்னிச்சுடா கண்ணா…!!”என ராவணன் கைகளைப் பிடித்து அழுதார் வடிவு…

விடுங்க மா.. கடந்த காலங்கிற குட்டையிலே தேங்கி நிற்காம நாளைக்கு சேரப் போற கடலையும் நினைக்காம.. எதையும் கடந்து போகும் இன்றைய நதியா இருப்போம்…!!! (புரிஞ்சு இருக்கும்னு நம்புவோம் )

பிடித்திருந்த அவன் கைகளை கண்களில் ஒற்றியவர், விழிகள் விடாமல் கண்ணீரை சுரக்க, அவர் தோள்களில் தட்டி சமாதானம் செய்தான்.

ஒருவாறு அவனுக்கு ஓய்வு தர எண்ணி அனைவரும் வெளியேற, அவனுடன் எஞ்சி இருந்தது வளவனும் மகிழும் மட்டுமே.

“அடுத்து என்ன ராவணா…?” என வினவிய வளவனிடம்…

“ம்ம்ம்.. மனோ கப்பலோடு சேர்த்து எரிந்து செத்துட்டான், அவனோட நெட்வொர்க்கும் அழிஞ்சு போச்சுன்னு ரிப்போர்ட் கொடுத்துடு. அப்படியே அவங்க அப்பன் கேஸ்ல இருந்து வெளியே வரமுடியாத மாதிரி பார்த்துக்கோ…!!!” என அழுத்தமாக சொன்னதின் அர்த்தம் புரிந்தவன் சின்ன சிரிப்போடு வெளியேறிட…

“என்ன அத்தான் சொல்றீங்க, அப்போ அவன் நீங்க சுட்டதால சாகலையா..??”

“அதை ஏன் தள்ளி நின்னு கேக்குற, இங்க பக்கத்துல வந்து கேளுடி சொல்றேன்..!!” என படுக்கையில் தள்ளிப் படுத்து அவளுக்கு இடம் ஒதுக்கிட,

சின்ன முறுவலுடன் அவன் பக்கத்தில் அமர, அவள் தோள்களை சுற்றி கையை போட்டு மேலும் நெருக்கமாக அமர்த்திக் கொண்டவன், மற்ற கையால் அவள் விரல்களோடு தன் விரல்களை பின்னிக்கொண்டவாறே தொடர்ந்தான்…

“நான் அவனை சுட்டேன் தான் ஆனா அவன் சாகலை…!!”

“என்ன சொல்றிங்க…???”என குழப்பமாக வினவியவளிடம்….

“அதான் சொல்றேன்ல நான் சுட்டும் அவன் சாகலடி…!!”

“அப்புறம்…??”என்றவளுக்கு பதிலை சொல்லாமல் 

“என் செல்லக்குட்டி அத்தான் இல்லன்னு இளைச்சிட்டா போல..!!” என அவள் தொங்கும் தோட்டத்தில் தொட்டில் போட… அவன் கைகளை தடுத்தவள்..

“ஐயோ அத்தான் இப்போ அவன் எப்படி செத்தான் சொல்ல போறீங்களா.. இல்லையா..?? எனக்கு தெரிஞ்சிக்கலனா தலையே வெடிச்சிடும்…ப்ளீஸ் என் சமச்சது சக்கரைகட்டி இல்லை சொல்லுமா…!!” என அவன் தாடையை பிடித்து கெஞ்ச..

அவள் மீது சலுகை எடுத்து கொண்டவன்… தடுத்த அவள் கைகளை தள்ளி வைத்து மீண்டும் பதமாக உருட்ட…

“ஸ்ஸ். ஹா.. சொல்லுங்க.அஅஅஅ..!!”என வாகாக கொடுக்க…

“ம்ம்ம்… பாதி உயிரோட போராடிட்டு இருந்தவனை கப்பலோட சேர்த்து கொளுத்தியாச்சு போதுமா..!!”

யாரு..?? நீங்கதான் இங்க ட்ரீட்மென்ட்ல இருந்தீங்களே…??

(கடைசி எபி வந்தும் அறிவை யூஸ் பண்ண மாட்டேங்குறியே இவளை…)

வளவன்..!!

அண்ணனா..?…

அதான் சொல்லிட்டேன்ல அப்புறம் ஏன் இந்த சிப்பி வாயைத் திறக்குற.. அத்தானுக்கு உடம்பெல்லாம் வலிக்குது..!! என அடிபோட

அச்சச்சோ எங்க வலிக்குது..?? இருங்க போய் டாக்டர கூட்டிட்டு வரேன்..!! என எழப் போனவளைப் பிடித்து

அடியே இதுக்கு டாக்டர்லாம் வேணாம்.. நீ பூஸ்ட் குடுத்தா எல்லாம் சரியா போய்டும்…!!

பூஸ்ட்டா இருங்க கலக்கி எடுத்துட்டு வரேன்..!! அவன் எதை கேட்கிறான் எனத் தெரியாமல் கேட்கும் மனையாளை..

ம்ஹ்ம் உன்கிட்ட எல்லாம் சூசகமா கேட்டேன் பாரு என் தப்பு தான்டி..!! என்றவன் அவளைப் பிடித்து தன் புறமாக இழுத்தவன் அவள் மலர் இதழ்களைக் கொய்தவன் தேனை அருந்த, கைகள் அதற்குப் பிடித்தமான தசை கோலங்களை அளக்கும் பணியைச் செவ்வனே செய்ய…

ஹா… ம்ம்ம்.ம்ம்ம்ம்..!” அவன் இழுக்கையில் முதலில் தடுமாறியவள்… அவன் எதை கேட்கிறான் என்று புரிய ஆரம்பித்ததும்.. அவன் காயம் மீது படாமல் ஒதுங்கி அவனுக்கு ஒத்துழைப்பு தர…

இடைவிடாத ஆழ்ந்த முத்தத்தில் களைத்து விழுந்தவளின் கன்னத்தை தாங்கியவன்…

“என்னடா சிட்டு வர வர ரொம்ப சோர்ந்து போற..உடம்புக்கு ஏதாச்சும் பண்ணுதா டாக்டர் கிட்ட காட்டுவோமா…!!” என அக்கறையாக கேட்டவனை வெட்கம் மேலிட அவன் கைகளை எடுத்து அவள் வயிற்றில் வைக்க…

இன்ப அதிர்ச்சியில் கண்களை விரித்து…“சிட்டு..!” என ஆனந்த கூக்குரலுடன்.. அணைத்து கொள்ள…

எத்தனை நாள்..??? எப்போ தெரியும்…??? எல்லாருக்கும் தெரியுமா..?? என இடைவிடாமல் ஆர்ப்பரித்தவனின் தோள்களில் சாய்ந்து கொண்டவள்…

நாற்பத்தி அஞ்சு நாள்… நேத்து தான் தலை சுத்துற மாதிரி இருக்குனு டாக்டர பார்த்தேன்… உங்களுக்கு சொல்லாம யார்கிட்டயும் சொல்லத் தோணலை…!! என்றவள் தன் சூல் ஏந்தும் மணி வயிற்றில் கை வைத்து நெகிழ்ந்திருந்தவன்.. அவளை ஆதரவாக அணைத்து கொண்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்…

அதன் பின் நற்செய்தி அனைவரிடமும் பகிர… அனைவரும் சந்தோஷத்தில் மூழ்கிட… தொடர்ந்து வந்த நாட்களில் சொன்னது போல் ஆதிரன் வந்து பார்த்துவிட்டு செல்ல ராவணன் பூரணமாக குணமடைந்து மருத்துவமனையை விட்டு ஊருக்கு செல்ல தயாராகும் போது..

‘ஜெயிலில் இருந்த குணசீலன் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டான்’ என்று செய்தி வர.. ராவணன் பார்வையும் வளவன் பார்வையும் நேர்கோட்டில் சந்தித்து மீண்டன, அங்கே ராஜ துரையை தவிர யாரும் அதை கண்டுகொள்ளவில்லை…

மீண்டும் பணியில் சேர்ந்த வளவன் மற்றும் ராவணன்… கடமை தவறாத காவல் அதிகாரியாக செயல்பட்டு பல பதக்கங்களைப் பரிசாகப் பெற்றனர்.

வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைக் கண்டு தேங்காமல், எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் வருவதை எதிர்கொள்ளும் திடமுடைய ராவணனுக்கு எங்கும் எதிலும் ஜெயமே…!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top