ஏற்பாடு பொழுதில் சென்ற வடிவு மாலை ஆகியும் வந்து சேராததால் அஞ்சி ஊர், வயல் என அனைத்து இடங்களிலும் தேடியும் வடிவு கிடைக்கவில்லை என ஊர் பொதுவில் முறையிட்டார்.
“என்னப்பா சங்கரா சொல்றே?”
“ஊர் முழுக்க தேடியும் உன் தங்கச்சிய காணலயா?”
அதாங்க ஐயா, எனக்கும் ஒண்ணும் புரியல. வயசு பொண்ணுங்க, மனசு பதறுதுங்க. எப்படியாச்சும் தேடி கொடுங்கன்னு உங்கள தேடி வந்து இருக்கேன்.
உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்காப்பா?
ஐயா, தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு பெரியவர் மகன் ராஜதுரை மேல தான் சந்தேகமா இருக்கு…
என்ன சிவசங்கரா, வாய் இருக்குன்னு என் மகன் மேல பழி போடுறியா, இல்ல பெரிய இடம்னு நீயும் உன் தங்கச்சியும் வளைச்சு போட பார்க்குறியா? என்றவரின் வார்த்தைகள் சிவசங்கரனை சீண்டி பார்த்தன.
ஐயா…!!! நாங்கள் ஒன்னும் அப்படிப்பட்ட ஆள்கள் இல்லை.. உங்க மகன் தான் என் தங்கச்சி கிட்ட வம்பு இழுத்து சுத்திட்டு இருந்ததுக்கு இந்த ஊர்கரங்களுக்கே தெரியும்..! அதுவும் இல்லமா உங்க மகன் நேத்து தோப்புல கள்ளு குடிக்கும்போது என் தங்கச்சி தூக்குறதா பேசிக்கிட்டதைக் கேட்ட சாட்சியும் இருக்காங்க.. வேணும்னா நீங்களே விசாரிச்சிக்கோங்க!!”…என அவர்கள் முன் நால்வரை நிறுத்தினார்கள்… (இராவணனுக்கு எதிரா பஞ்சாயத்து பண்ண அதே நாலு பேர் தான் மக்களே..)
ஆமாங்க ஐயா.!! துரை ஐயா சொன்னத நாங்கள் எங்க காதால கேட்டோம்..!!
என்னாலே மக்கா கூட இருந்து துரோகம் பண்றீங்களோ…!!
ஐயோ அப்படி இல்லைங்க…வடிவை ஊருக்கு வடக்கால இருக்குற ஆலைக்கு தூக்கிட்டு போனதா வழியில பார்த்தவங்க சொல்லிக்கிறாங்க..எங்கள நம்பலைனா நீங்களே வந்து பாருங்க..!
அதான்.. இவ்ளோ சொல்றான்ல..! வாங்க எல்லாம் போய் பார்த்தா உண்மையா பொய்யானு தெரிஞ்சிட போகுது..!என்ற அனைவரும் அங்கு சென்றனர்
கை, கால், வாய் கட்டப்பட்ட வடிவுக்கு முன்னால் உக்கிரமாக நின்ற ராஜதுரையை தான் பார்த்தார்கள்..!
ஏலே துரை..?? என்னலே இது ஊர்காரங்க அத்தனை பேரும் சொன்ன அப்போ கூட நம்பலை..! இப்போ கண்ணால நானே பார்த்துட்டேன்டே..!! எதுக்குவே அந்த புள்ளைய தூக்குன..!!
அங்கு அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதை நிமிடத்துக்குள் சுதாரித்தவர்..
ஆமா நான் தான் தூக்குனேன்..!! எனக்கு இவள பிடிச்சி போச்சு.. சொன்னேன் ஒத்துக்கல..!! அவங்க அண்ணனும் அதுக்குள்ள வேற மாப்பிளை பார்த்துட்டான் அதான் கல்யாணத்துக்கு முன்னாடியே தூக்கிட்டேன்..!!” என்றவரை.. வடிவு புரியாமல் பார்க்க, அடிக்கப் பாய்ந்தார் சிவசங்கரன்..
அவரை தடுத்து.. சமாதானம் செய்து.. ராஜதுரைக்கே வடிவை மணம் செய்து வைக்கக் கூற முதலில் மறுத்தவர்.. பின் சிவசங்கரனுக்கு லிங்கேஷ்வரியையும், ராஜதுரைக்கு வடிவையும் திருமணம் செய்து வைப்பதாகக் கூற..
அவர்கள் பெண் நம் வீட்டில் இருப்பதால் நம் பெண் அங்கு நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கையில் சம்மதித்து.. ஊர் கூடி சிறப்பாக திருமணம் நடைபெற்றது..
முதலில் முரண்டு பிடித்த வடிவு, ராஜதுரையின் காதலால் மெல்ல மெல்ல அவர்பால் காதலில் கரையத் தொடங்கினார். அதன் அடையாளமாகவே உதித்தவன் ராவணன்.
அந்த பெயரை வைப்பதில் வடிவுக்கு சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால், ராஜதுரைக்கு ஏனோ அந்த பெயர் பிடித்து விட்டதால், ஏற்றுக்கொண்டார் சிறந்த காதல் மனைவியாக.
அதே போல் சிவசங்கரன் – லிங்கேஸ்வரி தம்பதிக்கு பிறந்த செல்வனுக்கு வளவன் என பெயர் சூட்டினர்.
“ஐயோ, புள்ள நீ எதுக்கு இந்த வேகாத வெயில்லய கால் கடுக்க நடந்து வர…!!” என வயல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ராஜதுரை சுற்றியிருப்பவர்களை மறந்து…
வடிவிடம் விரைந்தவர்..அவர் கொண்டு வந்த உணவு கூடையை இறக்கி வைத்து தன் துண்டால் மனைவியின் வேர்வையை துடைத்து விட்டவரைப் பார்த்து
“கொள்” என்ற சிரிப்பு சத்தத்துடன்.. ” ராசுதுரை மச்சான் எப்படி இருந்த ஆளு இப்படி பொண்டாட்டிதாசனா ஆனவ..
“என் பங்காளிய கிணத்தடில அழுக்கு துணி துவைக்கறத பார்த்ததுக்கு அப்புறம் தான்..”
“ஹா..ஹா.. ஏலே செம்பா தேவையாலே உனக்கு இது..”
“சரிதான்..! வடிவு எங்க மச்சானை நல்ல முந்தானைல முடிஞ்சு வச்சிருக்க..ஆத்தா..!!எப்படியோ நல்லா இருந்தா போதும்..”!
“என்ன புள்ள கால்கடுக்க நடந்து வந்தவ எதுக்கு இங்க வெட்டி பேச்சு பேசிகிட்டு.. வா நிழலுக்கு போகலாம்.. என அழைத்து சென்றவர்..
கொண்டு வந்த உணவை அவசரமாக எடுத்து வடிவுக்கு கொடுக்க..
“வாங்கு புள்ள..!!”
“இல்லை..! உங்களுக்கு பசிக்கும் நீங்க சாப்பிடுங்க..”
“அட..! எனக்காக இந்த வெயிலில் சுமந்து வந்தது நீதான். நீ முதல்ல சாப்பிட..” என அவருக்கு ஊட்டிவிட்டவரின் அன்பில் நெகிழ்ந்து போனார்..
சிறந்த கணவராக ஆகிப்போனார். அது நிலைக்காமல் போனது அவரது துரதிர்ஷ்டமோ..!!
இனிமையான தென்றலாக சென்ற அவர்கள் வாழ்க்கையில் சந்தேகம் என்னும் புயல் மையம் கொள்ள ஆரம்பித்தது..
ராஜதுரை வேறு பெண்ணுடன் இருப்பதாக வடிவிடம் பறந்து வந்தது வதந்தி..
முதலில் நம்ப மறுத்த வடிவுக்கு..
ஆமாடா..! அவளை பழி வாங்க தான் தூக்குனேன்.. இப்போ என்ன பண்ணப்போற.. என் வாழ்க்கை எனக்கு புடிச்ச மாதிரி தான் வாழுவேன்…. நான் தனி காட்டு ராஜா டா..!!” என்ற ராஜதுரையின் வார்த்தைகளைக் கேட்ட பின் அவரால் ராஜதுரையின் துரோகத்தை ஏற்க முடியாமல் அவரை விட்டு பிரிய நினைத்தார்…
தடுக்க வந்த ராஜதுரையின் வார்த்தைகளைக் கேட்கக் கூட விரும்பாமல் ஆறு மாத கருவுடனும் ராவணனையும் அழைத்துச் செல்ல முற்பட…
தாயுடன் செல்ல மறுக்க..
“அவரோட இருந்தா..! உன்னையும் கெடுத்து உருப்படாம பண்ணிடுவார் வாடா…!!” என எவ்வளவு சொல்லியும் தந்தையை விட்டு வர மறுத்தது கன்று..
அறியா வயதில் தந்தையோடு சென்ற இராவணன்… அவரையும், ஊரையும் விட்டு பிரிந்து செல்ல காரணமாக இருந்தவைகளை அடுத்த பதிவில் பார்க்கலாம் மக்களே..
அடுத்த பதிவு வருமான்னு சந்தேகமா கேட்டா வராது.. வரும்னு நம்புவோம் என்ன சரியா..



