காதல் செய்யாதே -7
“என்ன..? பஞ்சாயத்து சொன்னாங்க ஒரு ஆலமரத்தை காணோம், ஒரு திண்ணைய காணோம் அட பஞ்சாயத்துக்கு முக்கியம் சொம்பு அந்த சொம்பையே காணும் அடேய் இதெல்லாம் தானடா பஞ்சாயத்துக்கு முக்கிய செட் ப்ரோப்ரீட்டிஸ்ன்னு காலம் காலமா தமிழ் சினிமால காட்டுனாங்க.. (தட் சொம்பை காணோம் மொமெண்ட்..)”
அந்த தோட்ட வீட்டு முன் ராஜ துரை மற்றும் ஊர் பெரியவர்கள் சிலர் அமர்ந்து இருக்க..(அங்கேயும் சொம்பு இல்லை..)
அவர் பின்னால் பண்ணை வேலை செய்பவர்கள் (பயில்வான்கள்) நின்று இருக்க.. சுத்தி பொதுமக்களும் நிற்க அதில் நடு நாயகமாக நின்று இருந்தார் வடிவு.. கையில் சில காகிதங்களுடன் நின்று இருந்தார்..
கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த சிவசங்கரன் தங்கை வடிவின் அருகில் சென்று அவருக்கு துணையாக நின்று கொண்டார்..
“அதான் எல்லாம் வந்தாச்சே..!! என்ன பஞ்சாயத்துனு சீக்கிரம் கேட்டு விடுங்கப்பா மனுஷனுக்கு ஆயிரம் சோலி கெடக்கு..?” என்றார் ராஜதுரை நாச்சியாரை சலிப்பாக பார்த்தபடி..
“இருக்காதா பின்ன மாசத்துக்கு ஒரு பஞ்சாயத்தை அந்த அம்மா அவர் மேல் கூட்டுது. அப்போ இருக்கும் தான.!!”
இவங்க பஞ்சாயத்து தான் ஊருக்கே ஒரு என்டேர்டைன்மெண்ட் அந்த அம்மா எதையாவது கண்டுபிடித்து அவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும் அதை அவர் தன் சாதுரியத்தால் திசை திருப்பி விடுவது அல்லது தவிடுப்பொடி ஆக்கிவிட்டு சென்று விடுவார்..
ஆனாலும் விடாமல் போராடுவதே வடிவின் குணம்.. இன்றும் அதே போல் ஒரு பஞ்சாயத்து.. அதாவது ஊருக்கு ரோடு போட சர்க்கார் விட்ட டெண்டரில் மோசடி நடந்து இருப்பதாக வடிவு புகார் தெரிவித்துள்ளார்.. அதுவும் அந்த ரோடு ஒப்பந்தம் எடுத்தது நம்ம ராஜதுரை என்பதே சிறப்பு..
“சொல்லுங்க மா…?? என்ன பஞ்சாயத்து இன்னைக்குனு..?” என சலிப்பாக கேட்டார்.. ஊர் பஞ்சாயத்து தலைவர்..
நடந்த முறைகேட்டைப் பற்றி கூறி முடித்தவர்.”அது மட்டுமில்ல ரோடு அரசாங்கம் நிர்ணயம் செஞ்ச உயரத்தை விட குறைவாகவும் தரமில்லாமலும் போட்டு இருக்காங்க..!!” என ராஜதுரையை பார்த்து குற்றம் சாட்டினார்.
“ஏன்யா வீராசாமி அது சர்க்கார் ரோடு தான அவங்க அப்பன் வீட்டு ரோடா என்ன.. அடிக்கிற வெயில்ல தார் உருகி போச்சு அதுக்கு நான் என்ன ரோடுக்கு குடை பிடிச்சிட்டு உட்காரவா முடியும்..??” (எதே.. )
“இந்த நக்கல் பண்ற வேலைலாம் வேணாம். நீங்க ரோடு காண்ட்ராக்டுக்கு வாங்குன காசை விட கம்மியா செலவுல ரோடு போட்டு இருக்கீங்க..!!”
“அப்படி நீங்க போட்ட ரோடு ஒரு மழைக்கு கூட தாங்கல.. ரோடு அங்க அங்க குண்டும் குழியுமா இருக்கு.. அதனால முந்தாநேத்து அந்த வழியா போன வடிவேலும் அவன் சம்சாரம் அன்பு நிறை மாசமா இருந்தவளும் ரோடுல விழுந்து இப்போ அவ சீரியசா ஆஸ்பத்திரில கெடக்கா.. அதுக்கு என்ன பதில் சொல்ல போறாருனு கேட்டு சொல்லுங்க வீராசாமி அண்ணாச்சி..??”
“ஏலே வண்டியை குடிச்சிட்டு ஓட்டிட்டு போய் எவனாவது விழுந்து செத்தா அதுக்கு நான் என்ன பண்ணுவேன்.. அப்புறம் என் மேல போட்ட பழிக்கெல்லாம் என்ன அத்தாட்சி கேளுமைய்யா..??”
“அதுக்கு அத்தாட்சி இருக்கு தகவல் அறியும் சட்டம் மூலமா இவங்க எடுத்த ஒப்பந்த தொகை இவங்க செலவழிச்சதா கணக்கு காட்டுனது முதல் மொத்த விவரமும் இருக்கு அண்ணாச்சி..!!” என்றவர் அவரிடம் கொடுக்க அவர் அதை ராஜதுரையிடம் கொடுக்க வாங்கி பார்த்தவர் எதுவும் சொல்லாது நாச்சியை பார்க்க அவர் திமிராக நிற்க.. அவரை கீழிருந்து மேலாக பார்த்தவர்.. “ஹும் இந்த வயசுலயும் அந்த வனப்பு குறையாம தான்யா இருக்கா..!!” என மனதில் மார்க்கமாக நினைத்தை நாச்சி கண்டு கொண்டார் போல் கண்களாலே அவரை எரித்தார்..
“எந்த வயசுல என்ன வேலைய பாக்குறான் பாரு அதுவும் ஊர் முன்னாடி வச்சி..!!” என அவர் நினைத்ததை ராஜதுரைக்கு கேட்டு விட்டது போல்.. நாச்சியை பார்த்து யாரும் அறியாமல் கண்ணடித்து
அவரின் கோபத்தை மேலும் தூண்டி விட்டு.. கோவத்தில் சிவக்கும் அவரின் கன்னத்தை ரசனையாக பார்த்து ரசித்தார்..(என் கதைல ஆன்ட்டிங்களுக்கு பாதுகாப்பு இல்லையா..)
ஆதாரங்களை முழுமையாக படித்தவர்.. “ஆமா இதுல அந்த புள்ள சொன்ன மாதிரி தான் இருக்கு ஆனா இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்..?”
“என்னப்பா சொல்லுத..??”
“அட ஆமா வீராசாமி அண்ணாச்சி அவ…என வந்ததை..” அவங்க சொன்ன மாதிரி ஒப்பந்தத்துல கையாடல் நடந்து இருக்கு ஆனா இந்த ஒப்பந்தம் எங்க என் பேருல இருக்கு அது நம்ம பழனியப்பன் பேர்ல தான கெடக்கு..!!” என்றார்..
கூட்டம் மொத்தமும் இப்போது குழம்பி போனது.. இது என்ன என்பது போல் வடிவை பார்க்க..
“பழனியப்பன் உங்க பினாமி தான அவர் பேர்ல ஒப்பந்தம் எடுத்து நீங்கதானே மொத்த வேலையும் பார்த்தது என்றார்..!!”
“இது என்னடா எங்க போன மாரியாத்தா என் மேல வந்து ஏறு ஆத்தா மாதிரி.. யாரோ பண்ணத்துக்கு என்கிட்ட நியாயம் கேட்டா… போங்க போய் பழனியப்பன் கையாடல் பண்ண பணத்தை அவன் ஊரை விட்டு ஓடுறதுக்குள்ள போய் புடிச்சி கேளுங்க என்றவர்..!!” இந்த பஞ்சாயத்தையும் கலைக்க..
தன் மீசையை முறுக்கி வடிவை பார்த்து “எப்படி” என புருவம் உயர்த்தி கேட்க..
அவரை எதுவும் செய்ய இயலாமையில் பழனியப்பன் வீடு தேடி போக அங்க பெரியதாக பூட்டு போட்டு புட்டப்பட்ட வீடு அவர்களை பார்த்து பல் இளிக்க.. கடுப்புடன் வீடு திரும்பினர்..
“இதை இப்படியே விடக்கூடாது அண்ணே.. எப்படியாவது அந்த ஆளை பிடிச்சி ராசாதுரை பெரிய மனுஷன் வேஷத்தை கலைக்கல.??”. என பொங்கியவரை சமாதானம் செய்து.. அவர் வளவனிடம் புகார் கொடுக்க..
அவன் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் தெரிவிக்க சொல்ல.. வளவனும் வடிவும் அங்கு சென்று புகார் கொடுக்க..
அவர்களின் புகாரை ஏற்று கொண்டது மாவட்டத்திற்கு புதிதாக வந்த எஸ். பி.ராவணனிடம்..
அவர்களின் புகாரை வசித்தவன்.. அவர்களை இகழ்ச்சியாக பார்த்தவன்..
“இன்னும் அதே வறட்டு பிடிவாதத்தை பிடிச்சிகிட்டு ஊர்ல பெரிய மனுஷரை தொந்தரவு பண்ணிக்கிட்டு தான் இருக்கியாலோ..??”
“எத்தனை வாட்டி பட்டாலும் மாற போறதில்ல.. போல..?” என்றவனை..
“இப்போ கேஸ் எடுப்பீங்களா மாட்டீங்களா அத மட்டும் சொல்லுங்க அதிகாரி..??”
“அடயேப்பா.. எவ்வளவு பெரிய ஆளு நீங்க உங்க வழக்க எடுக்காம இருப்போமா….??” எள்ளலாக சொன்னவனை முறைத்துவிட்டு கெளம்பினார்..
“இன்னும் நீதி நேர்மைனு அதே பல்லவிய தான் பிடிச்சிட்டு சுத்துறியோ..?” என வளவனை கேட்க
“கண்டிப்பா அது கூடவே பிறந்தது..!!”
“அதனால தான் இன்னவரை கீழேயே இருக்க..!!”
“சிலரை மாதிரி குறுக்கு வழில மேல போறத விட படி படியா மேல போறது தப்பில்ல ஏன்னா சீக்கிரம் மேல ஏறுன வேகத்துல கீழ விழுந்தவங்க நிறைய பேர நான் நேர்லயே பார்த்து இருக்கேன்..!!” என அவனை பார்த்து கேலியாக புருவம் உயர்த்த முகம் கருக்க நின்றான் ராவணன்..
வீட்டுக்கு வந்த வளவனுக்கு, சாம்பாவி காதல் தோல்வியில் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள் என செய்தி எட்டிட..
விழுந்து அடித்து பிடித்து கொண்டு சென்றான்..
கண்களில் பரிதவிப்புடன் ஊரில் உள்ள அனைத்து கிணற்றையும் தேடி பார்த்தவன் ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் கிணறு அருகே செல்ல அங்க கூட்டமாக இருப்பதை கண்டு அவன் இதயம் துடிப்பதை நிறுத்த.. வேகமாக அருகில் சென்று பார்க்க பிள்ளைகள் இளவட்டங்கள் நீச்சல் பழகி கொண்டு இருந்ததை கண்டு ஆசுவாசம் அடைந்தவனை தோளில் தட்டி அழைத்தாள் மகிழ்..
“என்ன சாம்பவி கிணத்துல விழுந்துட்டான்னு ஊர் முழுக்க தேடி திரிஞ்சு வரீங்களோ..???”
“சும்மா சொல்ல கூடாது சாம்பவிக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோனு நீங்க பதறுனத பார்த்தா.. ஹப்பா என்ன லவ்ஸ் . உள்ளுக்குள்ள அவ்ளோ பாசம் வச்சி இருக்குற ஆளு எதுக்கு அந்த புள்ளையை கண்டா வேண்டாதவளை பார்க்குற மாதிரி ஒதுக்குறீங்க..!!”
“அதெல்லாம் ஒன்னுமில்ல எங்க அத்தை பொண்ணுக்கு என்ன ஆச்சோனு தான் பாக்க வந்தேன்.. மத்தபடி அவ மேல எனக்கு எந்த கன்றாவியும் இல்ல..!!”
“ச்சு ச்சு ஓஓஓஓ அப்படி, சரி அப்ப எதுக்குண்ணா நம்ம வீட்டு கொல்லைல ஜீப்பு மேல ஏறி அவளுக்கு தெரியாம அவள பாக்குற, அவ எங்க வரா எங்க போறான்னு விசாரிக்குற, சரி இதெல்லாம் அவமேல இருக்குற அக்கறை சரி, நீதான் கட்டிக்க மாட்டேன் சொன்னல அப்புறம் ஏன் அவள பொண்ணு கேட்டு வர மாப்பிள்ளைய தொரத்தி விடற அதுகூட விடு ஆமா இதெல்லாம் என்னண்ணா எல்லாம் பொம்பள பிள்ளைங்க போடுற மணி, வளையல், கொலுசு எல்லாம் உன் ரூம்ல என்ன பண்ணுது அதுவும் இது எல்லாம் சாம்பவிக்கு சரியா இருக்கே எப்படி.. “
“அ.அது வந்து.???”
“சும்மா காரணம் சொல்லாதீங்க.. நீயும் சாம்பவிய விரும்பற… அவளும் உன்ன மட்டும் தான் விரும்புறா அப்புறம் ஏன் இந்த தண்டனை..??”
“அவ செஞ்சது சரியா என் மேல இருக்குற வெறில உன்ன தள்ளி கொல்ல பார்த்தவள கொஞ்ச சொல்றியா..!!”
“சரி அண்ணி பண்ணதுக்கு நீங்க தண்டனை குடுத்தீங்க ஓகே. நீங்க பண்ணது மட்டும் சரியா..?”
“நானா நான் என்னமா பண்ணேன் நானா அவள ஊர்ல இருக்கவங்க கிட்ட எல்லாம் வம்பு இழுக்க சொன்னேன். நானா வயசானவாங்கனு கூட பாக்காம விரட்ட சொன்னேன்.. நானா உன்ன தள்ளி விட சொன்னேன்..??”
“இல்லை..!!”
“அப்புறம் ஏன் மா இப்படி சொல்ற..?”
” அவ அந்த அளவுக்கு போக நீங்க தான் காரணம்.. அவ அப்படி ஆனானா உங்க மேல இருக்குற நம்பிக்கையின்மை தான் காரணம். எங்க நீங்க அவள விட்டு வேற ஒருத்தரை கட்டிக்குவீங்களோ அந்த பயத்துல அவ அப்படி நடத்துகிட்டு உங்கள தக்க வச்சிக்க பார்த்தா..!!”
“நானா…?? நானாமா..?? அவள தவிர வேற பொண்ண மனசுல நினைச்சி கூட பாக்காத என்னையா மா சொல்ற..?”
“அத அவ கிட்ட எப்போதாவது சொல்லி இருக்கீங்களா..?”
“இ..இல்ல..??”
“அவ கிட்ட பாசமா நடந்து இருக்கீங்களா..? உங்க அன்பை வெளிப்படையா அவளுக்கு தெரியுற மாதிரி பேசி இருக்கீங்களா….??”
இ..இல்லமா..?? என்றவன் தலையைத் தொங்க விட்டான்.
அப்புறம் எப்படி உங்க மனசுல அவதான் இருக்கான்னு அவளுக்குத் தெரியும்..?
தப்பு தான் மா, அவ அப்படி நடந்துகிட்டதுக்கு ஒரு வகையில நானும் ஒரு காரணம் ஆகிட்டேன்..? என வருந்தியவனிடம்.
நீங்க அண்ணிய உண்மையா காதலிக்கிறீங்க, அந்த அன்பு அவங்கள மாத்தும். நீங்க ஒதுக்க ஒதுக்க தான் அவங்க பாதிக்கப்படுவாங்க..!! என்றவளிடம்..
சரி மா, இனி என் அன்பை முழுவதும் அவளுக்கு காட்டுறேன். அவளை மாத்த வேண்டியது என் பொறுப்பு..!!
அண்ணி கேட்டுச்சா, அண்ணா உங்கள கட்டிக்க சமாதிச்சிட்டாங்க.. நான் சொன்னேன்ல அண்ணன் உங்கள தான் லவ் பண்றாருன்னு நீங்க நம்பலை இல்ல, இப்போ என்ன சொல்றிங்க..?? என்றதும் மறைவாக இருந்த சாம்பவி அவன் முன் வந்தாள்..
அண்ணி நான் பந்தயத்துல ஜெயிச்சிட்டேன், எனக்கு சொன்ன வாக்கை காப்பாத்துங்க..!! என்றவள் சிட்டாக பறந்து விட்டாள்.
அவள் சென்றதும் ஓடி வந்து அவனை கட்டி கொண்டு அழ, அவளை தன் மார்பில் அணைத்து ஆறுதல் படுத்தியவன், அவளை அழைத்து கொண்டு சென்றது அவன் அத்தையிடம் பெண் கேட்க தான்.
இவன் “எப்போது சம்மதம்” சொல்லுவான் என காத்து கொண்டு இருந்தவர்கள் சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனார்கள்.
ஒரு சுப யோக சுப தினத்தில் அவர்கள் திருமணம் வைப்பதாக பெரியோர்கள் தீர்மானிக்க,
திருமண வேலைகள் துரிதத்தில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மக்களே எல்லாரும் வளவன் – சாம்பவி கல்யாணத்துக்கு வந்துடுங்க, சரியா.



