கனா கண்டேனடி சகியே -20

கனா கண்டேனடி சகியே -20

இடிந்து போன தோற்றத்தில் கனலினி அவினியை விஹானிடம் ஒப்படைத்து விட்டு கால் போன போக்கில் கடற்கரைக்கு சென்றவள்…

எவ்வளவு நேரம் இருண்ட வானத்தை வெறித்தளோ…”என்ன என்ன வார்த்தைகள் பேசி விட்டான்…!” என மனம் தாங்காமல்.மடிந்து அமர்ந்து “ஓஓஓஓ” என்று கதறி அழ தொடங்கினாள்… மங்கை அவளின் கதறலை கண்டு காற்றும் பதறி அவளை ஆரத் தழுவியதோ…???

எவ்வளவு நேரம் காரிகை கரைந்தாளோ…??? பின் தன்னை தானே தேற்றி கொண்டவள்… அவினியை அழைத்து கொண்டு மும்பையிலே வேறு இடம் பார்க்க ஆரம்பித்தாள்…

 தோற்றுப்போய் பெற்றவர்களிடம் செல்ல அவமானம் தடுத்தது… ” எங்க கூடவே வந்துடு கனல் நாம கனடா திரும்பி போய்டலாம்…!!!” என அழைத்த விஹானிடம்… கசந்த புன்னகையோடு மறுத்தவள்… “இல்லை விஹான் தெரிஞ்சோ தெரியாமலோ அவர உண்மையா லவ் பண்ணிட்டேன்… அவர் காதல் தான் பொய்த்து  போனதே ஒழிய என் காதல் அது இன்னும் உயிரோடதான் இருக்கு… எனக்காக வரலைன்னாலும் அவினிக்காகவாது வருவார்…!!” என அவர்களோடு செல்ல  மறுத்தாள் தனியே செல்ல…

கனலினி நினைத்ததை விட மும்பையில் வீடு கிடைக்க வெகு சிரமமாக இருந்தது… எங்கு செல்வது…?? என்ன செய்வது…?? தவித்து நின்ற சமயம்…

கர்ணன் வந்தான்…

“நடந்தது எல்லாம் கேள்வி பட்டேன் வாமா…!!” என அவனோடு அழைக்க…

கனலினி தயங்கினாள்…

“உனக்கு ஒரு அண்ணன் இருந்து கூப்பிட்டா வர மாட்டியா என்ன…??வாமா…!!” என அழைக்கவும் மறுக்க தோணாமல் அவனோடு சென்றாள் 

அது ஒரு எலைட்  அப்பார்ட்மெண்ட்…  உள்ளே சென்றவள் அதன் அழகில் மயங்க தான் செய்தாள்…

“இது என்னோட அப்பார்ட்மெண்ட் தான் மா… நீயும் அவினியும் இங்கேயே தங்கிக்கோங்க…!!”கர்ணன்..

“அப்போ நீங்க…??? “கேள்வியாக கனலினி கேட்க…

“எனக்கு என்னமா நான் ஒண்டி கட்ட தான… துரியன் இம்போட் அண்ட் எக்போட் பிஸ்னஸ் அவன் கம்பெனி  எல்லாம் நான் தா பார்த்துக்குறேன்… எனக்கு இங்க வரவே நேரம் இருக்காது…   எனக்காக  யார் இருக்கா…!!!”என்கிற கடைசி வார்த்தையை விரக்தியாக சொல்லி முடிக்க கனலினிக்கே வருத்தமாகி விட்டது…

“நீங்க தியாவை லவ் பண்ணீங்களா அண்ணா…???”தயக்கம் தான் ஆனால் கேட்டு விட்டாள்…

“லவ் எல்லாம் இல்லைமா… யாரும் இல்லாத எனக்கு எல்லாமுமாய் ஒரு சொந்தம் கிடைக்க போகுதுனு ஒரு எதிர்பார்ப்பு, நிம்மதி,சந்தோசம், அவ்வளவு தான்…!!” என சொல்லும் போது அவன் உறவுக்காக எத்தனை ஏங்கி இருக்கிறான் என்பது அவன் ஏமாற்றம் நிறைந்த குரலில் கனலினிக்கு புரிந்தது…

“சாரி அண்ணா…!!” உண்மையான வருத்தத்துடன் சொன்னாள்…

“பரவல மா…!! அடுத்து என்ன பண்ண போற…???”

“இங்கையே பார்மசி பேக்டரி ரன் பண்ண போறேன் அண்ணா…ஏற்கனவே விஹான் கூட பண்ணின அனுபவம் இருக்கு…!!”

“நல்லது மா… உனக்கு என்ன உதவி வேணும்னாலும் என் கிட்ட கேக்க தயங்காத… சரியா பார்த்து இருந்துக்கோ மா நாளைக்கு எனக்கு தெரிஞ்சவங்கள அனுப்பி விடுறேன்… அவங்க எல்லா விதத்துலையும் உனக்கு துணையா இருப்பேன்…!!!”என்றதும்…

ஒரு விரக்தி புன்னகை… “இதே போல் சொன்ன ஒருவன் பொய்த்து போனான் அல்லவா…!!”

“எனக்கு புரியுது மா… நீ என்ன நினைக்குறன்னு… எல்லாருக்கும் எல்லாம் சூழலும் சாதகமா அமைந்து விடாதே… அவனுக்காக என்னோட உதவிய வேணாம் மட்டும் சொல்லிடாத மா… யாருமே இல்லாத வாழ்க்கை கொடுமை…!!”என்றவன் அவன் போன் நம்பர்… மற்றும் கார்டை கொடுத்து விட்டு கிளம்பினான்…

ஒருவழியாக கனலினி துரியன் அப்பார்ட்மெண்ட்ல் செட்டில் ஆனா பின் மறுநாள் அதிகாலை வேளை…

“டிங் டாங்” அழைப்பு மணி அடிக்க…

போய் கதவை திறந்து தான் தாமதம்…

“இன்னாமா நீங்க கதவை திறக்க… இம்புட்டு நேரமா  மேடமே சரி சரி நகரு…!!” என அங்கலாய்த்த படி ஒரு இளம் வயது யுவதி நிற்க…

கனலினி “யார்…?? என்ன…??” என விசாரிக்கும் முன்பே வீட்டுக்குள் புகுந்தவள்…

“தூங்கினு இருந்தியா மேடமே நான் ஒரு கூறு கெட்ட சிறுக்கி எனக்கு தான் நாய் பொழைப்பு வெரசா எழுந்து வந்துபுட்டேன்… நீங்க அப்படியா…!!” என உள்ளே வந்தவள்… மேஜையில் இறைந்து கிடந்த உணவை பார்த்தாவிட்டு…

“ஐய என்னம்மா இது… ம்ஹும் இந்த நாத்தம் நாறுது… வெளில இருந்து வாங்கி சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகிறது… சொல்லுங்க சுவர் இருந்தா தான் சித்திரம் வரைய முடியும்…என் கையால சாப்பிட்டு பாருங்க எப்படி ஆகுறீங்கன்னு… எப்படி இருக்கோம்னு சந்தேகம்லாம் வேணாம்மா… என் சாப்பாடா சாப்பிட்டு நம்ம ராக் ஸ்டார் பத்ரி சாரே பாராட்டி இருக்காரு தெரியுமா… அதே மாதிரி எனக்கு தெரியாத சமையலே இல்லை இந்தியன்,  சைனீஸ், பர்மிஸ், இங்கிலிஸ் (உடனே யாரும் பொங்க வேணாம்…கான்டினெண்டல் டிஷ் தான் பிள்ளை அப்படி சொல்லுது… )  எல்லாம் அத்துப்படி மேடமே..நம்ம கை பக்குவம் அப்படி ஒரு வாட்டி நான் சமைச்சத சாப்பிட்டா… விடவே மாட்டீங்க…!!”வாய் பேசிக்கொண்டு இருந்தாலும் கை ஜெட் வேகத்தில் சுத்தம் செய்ய…

பேசியபடியே சமையல் கட்டுக்குள் நுழைந்தவள் சிதறி கிடந்த பத்திரங்களை அடுக்கி வைத்து விட்டு பத்து பாத்திரங்களை கழுவ…

“ஹே நில்லு யாரு நீ… நீ பாட்டுக்கு உள்ள வந்த உன் பாட்டுக்கு பேசிட்டு  என்ன என்னமோ செஞ்சிட்டு இருக்க…???”என கனலினி கடுமையாக கேட்க…

“நான் ஒரு அறிவு கெட்ட சிறுக்கி பெயரை சொல்லாம லொட லொடன்னு பேசிகிட்டு… நான் அப்படி தான் மேடமே…என் பேரு சோனாலி மேடமே… எனக்கு ஊட்டு வேலைல இருந்து எல்லா வேலையும் அத்து படி… சம்பளம் எல்லாம் பெருசா எதிர் பார்க்க மாட்டேன்… மூணு வேலை சோறு.. இருக்க இடம் கொடுங்க… அப்புறம் நீங்களே என் வேலை புடிச்சி போய் சம்பளம் போட்டு குடுப்பிங்க பாருங்க…!!!”என தம்பட்டம் அடிக்க…

“உன்னை யார் இங்க வர சொன்னது எனக்கு வேலை ஆள் எல்லாம் தேவை இல்லை கிளம்பு போ…!!” என கனலினி சோனியா செயலில் கொதித்து நிற்க…

“ஏம்மா இது கர்ணன் அண்ணா வீடு தான…என சந்தேகம் கேட்டாள் (ஏன் அவசரம் இன்னு பொறுமையா கேக்க வேண்டியது தான )

“ஆமா…!!”கனல் குழப்பமாக…

“மேடமே கர்ணன் சொல்லி தான் இங்க வேலைக்கு வந்து இருக்கேன்… நானும் அண்ணனும் ஒரே இடத்துல வளர்ந்தவங்க…!!”என சோனாலி சொல்ல…

கனலினி கர்ணனுக்கு அழைத்து உறுதி படுத்தி கொண்டவள்… சோனியாவை யோசனையாக பார்க்க 

“ஐயோ என்ன மேடமே யோசிக்கிறீங்க… வேலைனு வந்துட்டா ஜப்பான் காரன் மாதிரி  சுறுசுறுப்பா செய்வேன்…எனக்கு வாய் தான் கொஞ்சம் ஓட்டை… எங்க அம்மா அடிக்கடி சொல்லும்… படபடனு பேசுறவங்களுக்கு  வெள்ளந்தி  மனசுன்னு… என்ன வேலைய விட்டு அனுப்பி புடாதீங்க மா…உங்கள நம்பி தான்  இருக்குற வேலை கூட விட்டு போட்டு வந்து புட்டேன்மேடமே வேணுனா இனி வாயே திறக்காம அம்புட்டும் சைகைலே பண்ணி காட்டுறேன் …!!””  என்றவள் செய்த  வித்தையை பார்த்து 

“பக்கு ” என்று சிரித்து விட்டாள் கனலினி…

“எப்பா… மேடமே சிரிச்சிட்ட அப்போ எனக்கு வேலை இருக்கு தானே…!!” என கனலினியின் கையை பிடித்து தாஜா பண்ண 

“ஹாஹா..இருக்கு…  இருக்கு… ஆனா இனி இப்படி சேட்டை பண்ணாத… சரியா…!!!”என

“சொல்லிட்டீங்கள மேடமே… என் வாலை சுருட்டி உள்ள வச்சிக்குறேன்…!!” என மீண்டும் குரங்கு போல் செய்து காட்ட

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top