கனா கண்டேனடி சகியே -19

கனா கண்டேனடி சகியே -19

கனலினியோடு பேசிவிட்டு வெளியே வந்த விஹான்…  தொலைபேசியை எடுத்து”  நீ சொன்ன மாதிரியே கல்யாணம் பத்தி துரியன் கிட்ட பேச சொல்லி விட்டேன்…!!” என்றான்…

” ஓகே தேங்க்ஸ் விஹான் இனி எல்லாம் நான் பாத்துக்குறேன்…!!” என்றான் மறுமுனையில்  ரித்விக் 

” இங்க பாரு அண்ணா கனலினிக்கு நல்லது நடக்கும் நீ சொன்னதனாலதான் நான் இப்படி செஞ்சேன்… மத்தபடி எனக்கு அவள் நலன் மட்டுமே முக்கியம்… புரியுதா…!!!” என எச்சரிக்கை விடுத்த வெட்டும் வைத்தான்…

” பொடி பயலே என் கிட்டேயே வா…!!” என நயவஞ்சமாக சிரித்தான்  ரித்விக் 

************

விஹான் கூறி விட்டு சென்றதில் இருந்து கனலினி எல்லா வகையிலும் யோசித்து பார்த்தாள்…

துரியனுக்கு குடும்பம் என வந்துவிட்டால் நிச்சயம் கெட்ட வழி செல்ல மாட்டான்… அத்தோடு கனலினி பெற்றோர்கள் முன் துரியன் என்னை உண்மையாக விரும்புகிறான்… என்பதை அவர்களுக்கு உணர்த்தலாம்… என சாதக பாதகங்களை பிரித்து அறிந்தவள்…

துரியன் கையால் மாலை வாங்க போகும் அந்த நன் நாளை நினைத்து பல கனவுகள் காண ஆரம்பித்து விட்டாள்…

சற்றும் தாமதிக்காமல் துரியனிடம் இது பற்றி பேச முடிவு எடுத்தவள்… ஸ்டீபனிடம் கேட்க… அவனோ முதலில் மறுத்து பின் முகவரி கொடுத்து அனுப்பி வைத்தான்…

அது ஒரு பாப் என்பதால்… அவினியை ஸ்டீபனிடம் விட்டு விட்டு  அவள் மட்டும் செல்ல…

கோடை வெயில் சூடு வெளியே என்றால் அதற்கு முரணாக உள்ளே குளிக்கால இருட்டும் குளுமையும் சூழ்ந்து இருந்தது…

 பரவிக் கிடந்த ஒளிசிதறலில் அங்கே குழுமி கிடந்த இளவட்டங்களில் தலை மட்டுமே  தெரிந்தது…பார்ட்டி ஹால் 

அங்கு திரளாக கூடி இருந்த பப் வாசிகள் மத்தியில் எங்கிருந்தோ அடிக்க பட்ட போக்கஸ் லைட்டில் இருவர் தோன்றினர்…

அதில் இருந்த பெண்… கையில் “ஹே ஃப்ரெண்ட்ஸ் உங்க எல்லாருக்கும் இன்னைக்கு ஒரு குட் நியூஸ்… அதுதான் இன்னிக்கு எங்களோட எங்கேஜிமெண்ட்… அதற்காக பார்ட்டி தான் இது… இன்னிக்கு இந்த பப்ல இருக்குற  எல்லோருக்கும் எங்களோட சார்பாக  ட்ரீட்…!!!”என அப்பெண் கையிலிருந்த சாம்பியன் பாட்டிலை திறந்து ஆர்ப்பரிக்க…

 அதைக் கண்ட மற்றவர்கள் அனைவரும் ஆரவாரம் செய்து அவர்களை வாழ்த்திட 

“ஹே ஹனி உன் பியான்ஸே எங்களுக்கு எல்லாம் காட்ட மாட்டியா…??” என கூட்டத்தில் இருந்த ஒருவன் கேட்க… 

“வொய் நாட்… மீட் மிஸ்டர் துரியன்… அமராவதி இண்டஸ்ட்ரீஸ் ஓனர்…!!!” என பெருமையாக அறிமுகம் செய்ய… கன கம்பீரமாக வந்து நின்றான்  துரியன் …

 அங்கு நடப்பதை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த கனலினி… துரியனை அப்பெண்ணுடன் கண்டதும் வியந்து போய் நின்றாள் என்றால்… அவனுடன் இருந்த பெண்ணும் “இருவருக்கும் நிச்சயம் ஆகிவிட்டது…!” என்று கூறியதைக் கேட்டவள்… உயிர் உறைந்து போய் நின்றாள்…

“இல்லை… இல்லை… இருக்காது இது அவரா இருக்காது  வேற யாராவதாகத்தான் இருக்க கூடும் … என் துரியன் என்னை ஏமாற்ற மாட்டார்…!!”என கண்ணெதிரே கண்ட காட்சியையும் நம்ப மறுத்தது கனலினி மூளையும் மனமும்…(ரொம்ப நல்ல புள்ளையா இருக்கியே மா நீ )

ஆனால் அடுத்து நொடியே சுக்குநூறாக உடைந்தது துரியனின் பேச்சால்…

“ஹாய்  பிரண்ட்ஸ் நான் தான் சுலேனாவோட ஃபியான்சி… இன்னைக்கு தான் எங்க எங்கேஜிமெண்ட் ஆனது… சோ என்ஜோய் த பார்ட்டி…!!” என அவன் குரலில் அட்சரம் பிசகாது கூறியதைக் கேட்டவள்…

தலையில் இடி விழுந்தது போன்று நின்றாள்…

“இல்லை இல்லை… இது நிஜம் இல்லை… கனவு… கனவே… அடியே கனல் முழிச்சிக்கிட்டே கனவு காணாத… அதுவும் துரியன் போய் வேற ஒரு பொண்ணு கூட ச்ச ச்ச… நிச்சயம் எனக்கு பைத்தியம் தான்..!!” என… துரியன் மீது அவள் வைத்து இருந்த நம்பிக்கை பறை சாற்றியது…

ஆனால் எதிரில் வந்த பெரர் அவள் மீது இடித்து விட்டு போக அவன் கையில் இருந்த கூரான பொருள்… கனலினியின் கையை கீறி விட்டு போனது… அதில் வலியை உணர்ந்தவளுக்கு நடப்பது… எல்லாம் கனவல்ல நிஜம் என்பது புரிய ஆரம்பிக்க…

 கண்ணில் வரத்தொடங்கிய நீரோடு துரியனின் நாடிச் சென்றாள்…

அருகே செல்ல செல்ல… துரியன் கைகளில் வேறு ஒரு பெண்ணின் கரத்தை பார்த்தவள் மனம் அங்கேயே உடைய ஆரம்பித்தது…

இருப்பினும்” கண்ணால் காண்பதும் பொய்…!! காதால் கேட்பதும் பொய்…!!! தீர விசாரிப்பதே மெய் …!! ஆகையால் துரியன் இடமே நேரில் சென்று விசாரித்து விடுவோம் எனத் தன்னை திடப்படுத்திக் கொண்டு  சென்றாள்…

“து…துரியன்…!!!” என  அழைக்கும் குரல் அவளுடையது தானோ என்கிற ஐயம் எழுந்தது …

“யார்…??”என திரும்பி பார்த்தவன்…

கனலினியை அங்கு எதிர் பார்க்க வில்லை என்பது அவன் இடுங்கிய கண்களால் கண்டு கொண்டவள்…

“இ…இங்க என்ன நடக்குது துரியன்…!!”” என அவன் கண்களை பார்த்து கேட்டாள்..

“ஏன் தெரியலையா என்னோட எங்கேஜ்மெண்ட் பார்ட்டி…!!! ஆமா நீ இங்க என்ன பண்ற உன்னை இங்க அனுப்பிட்டு அந்த ஸ்டீபன் என்ன பண்றான்…!!”என அலட்சிய பாவனையில் சொல்ல…

“எ..என்ன…??? என்ன சொல்றிங்க துரியன்… அப்போ நம்ம காதல்…???” அதிர்ச்சி விலகாமல் கேட்டு விட்டாள்…

துரியன் எதோ வாய் திறந்து கூற வரும் முன்… அவர்கள் அருகே வந்த சுலேனா…” டார்லிங் ஹூ இஸ் திஸ் சில்லி கேர்ள்…!!” என துரியன் மீது உரிமையாக உரசி  நின்றாள் பைங்கிளி…

“ஷி இஸ் மை கேர்ள் ஃப்ரண்டு…!!”  என்றவன்…

“ஓ நீங்க இன்வைட் பண்ணி பார்ட்டிக்கு வந்து இருக்காளா… நான் கூட எதோ ***** தான் நம்ம பார்ட்டிக்கு வந்துட்டாளோ நினைச்சேன்…!!!” என மட்டமாக கனலினியை பார்க்க…

கனலினிக்கு அவள் கூறிய அந்த **** வார்த்தையில் பளிங்கு முகம் அவமானத்தில் கருக்க… பதில் கூற வரும் முன் முந்தி கொண்ட துரியன்…

“யா… சுலேனா ஷி இஸ் மை கெஸ்ட்… நீ போய் மத்தவங்கள பாரு நான் இவள அனுப்பி வச்சிட்டு வரேன்…!!” என அவளை அந்த பக்கம் அனுப்பி வைத்தவன்…

தன் முன்னால் கலங்கி நின்ற கனலிடம் “இங்க பாரு கனல் இப்போ இங்க இருந்து நீ கிளம்புறது தான் உனக்கு நல்லது…நாம அப்புறமா பேசி கொள்ளலாம்…இப்போ போ..!!”என அவளை அனுப்பி வைக்க முயல…

“போதும் நிறுத்துங்க துரியன்… என்னோட கேள்விக்கு  பதிலை சொல்லுங்க… நான் இங்க இருந்து போயிடுறேன்… அதுக்கு அப்புறம் உங்கள டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்…!!!” என கனல்  தன் காதலை விட்டு கொடுக்க முடியாமல் போராட…

“ஊஃப் ஓகே ஆல்ரைட் இப்போ உனக்கு  என்ன பதில் வேணும் அவ்ளோ தானே கேட்டுக்கோ… எஸ் அவளை தான் நான் கல்யாணம் பண்ணிக்க போறேன்… அதுக்கு என்ன இப்போ…??? “என திமிராக சொல்ல 

“சொல்லி விட்டான்….!!!சொல்லியேவிட்டான்… அவளுக்கும் அவனுக்கும் இடையில் ஒன்னுமே இல்லையா…??? அவளுக்காக உயிரை விட துணிந்தது… அவளும் அவனுமாக இருந்த காதல் பொழுதுகள் அனைத்துமே பொய்யா…?? அதை அவனிடமே கேட்டு விட்டாள் 

“அப்போ நம் காதல்… என்னை காதலிக்குறேன் சொன்னிங்களே துரியன்… கடைசி வரை கை விடமாட்டேன் சொன்னது… எ..எல்லாம்… பொய்யா மிஸ்டர் துரியன்…!!!” என  குரல் உடையாமல் கேட்க நினைத்தவளை மீறியும் அழுகை அவள் கண்களில் எட்டி பார்த்தது…

“அது தான் சொல்லிட்டேன்ல இப்போ என்ன உன் பிரச்சனைனா…மறுபடியும் சொல்றேன் நல்லா கேட்டுக்கோ… அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு வேணுனா உன்னை வச்சிக்குறேன்…!!” என வெகு நக்கலாக கூற…

அவ்விடத்திலே சுக்கு நூறாக உடைந்தாள் கனல்… 

கனவு கலைந்து விட்டது…!!”

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top