கனா கண்டேனடி சகியே -10
வாழ்நாளில் இந்த அளவு வேதனையை கனலினி உணர்ந்தது இல்லை… ஏன் அவள் பெற்றோர் அவளை கை விட்ட சமயம் கூட… தைரியமாக போராடி அவினியை பெற்று எடுத்து இருக்கிறாள்… ஆனால் இன்றோ உண்மை தெரிந்த பின்பும் கனலினி வருந்த ஒரே காரணம் துரியனின் அலட்சியம் மட்டுமே…
அவனின் அலட்சியம் கனலினியின் தன்மானத்தை சீண்டி விட மும்பை விட்டு கிளம்ப முடிவு எடுத்தவள் “கனடாவிற்கு செல்கிறேன் “ என நோட் எழுதி வைத்து விட்டு அவினியை அழைத்து கொண்டு விமானம் ஏறி விட்டாள்….
விமானத்தில் ஏறும் வரை எதோ ஒரு பதட்டத்தில் இருந்தவள் விமானம் டேக் ஆப் ஆனா பின்னே நிம்மதி கொண்டாள்…
அவள் பதட்டத்திருக்கு வேறு என்ன காரணமாக இருந்து விட கூடும்…எல்லாம் துரியன்.. “அவினியை அவளிடம் இருந்து பிரித்து விடுவானோ…???” என்கிற பயம் தான்…”இப்போ எதுக்கு இவ்ளோ அவசரமா ஓடுறா… அவனை பார்த்து என்ன பயம் உனக்கு… ??? ” என கேள்வியை தொடுத்தது கனலினியின் மனச்சாட்சி
“நான் யாருக்கும் பயந்து ஓடல… எனக்கும் என் மகளுக்கும் நடுவுல வேற யாரும் வருவது எனக்கு பிடிக்கல…நான் அவ்ளோ சீப்பா போய்ட்டேனா அந்த ராஸ்கல்க்கு… தப்பு பண்ண அவனுக்கு இவ்வளவு திமிரு இருந்தா… தப்பே பண்ணாத நான் எதுக்கு பயப்படனும்… இனி அவனே தேடி வந்தாலும் எனக்கும் என் மகளுக்கும் அவன் வேணாம்… துஷ்டனைக் கண்டால் தூர விலகு சொல்லுவாங்க… அதனால தான் அவன் நிழல் கூட எங்க மேல படாத இடத்துக்கு போறேன்…!!!” என
“ஓ அவன் உன்னை அலட்சியம் படுத்தினது தான் கோவமா…??? அப்போ உன்கிட்ட மன்னிப்பு கேட்டா அவனைஏற்று கொள்வியா…??? “
“மாட்டேன் மாட்டேன் நிச்சயம் மாட்டேன்…!””என பிடிவாதமாக உள்ளுக்குள்ளே குமுறியவளை அவினி அழைக்க… அவளிடம் கவனத்தை செலுத்தியவளுக்கு எதோ வித்யாசம் ஏற்பட… சுற்றிலும் பார்த்தவள் அதிர்ந்து போனாள்….
*******
விழாவை முடித்து கொண்டு வந்து கனலினியை தேடியவர்கள்… அவள் எழுதி வைத்து விட்டு சென்றதை பார்த்து குழம்பியவர்கள்… விமான நிலையம் சென்று விசாரிக்க… கனலினி கனடா விமானத்தில் இல்லை என்று கூறிட திகைத்தவர்கள்… எங்கு சென்றாள்…??? என்ன ஆனாள்…??? என தெரியாமல் அவள் குடும்பத்தினர் தவிக்க … விஹானின் குடும்பம் உதவிக்கு வந்தது…. கனலினியை தேடி தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது…
**********
பரந்த அறையில் அந்த சின்ன ஸ்பாட் லைட்டை தவிர சுற்றி இருண்டு கிடக்க…
அந்த ஸ்பாட்லைட் அதன் அடியில் மணலால் நிரப்பப்பட்ட பஞ்சிங் பேக் அருகே… கையில்லாத பனியன் மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து கொண்டு வந்து துரியன்…
வெறி பிடித்தவன் போல் அந்த பஞ்சிங் பேகை வெறும் கையால் கும்மாங்குத்து குத்தியவன் மணிகட்டு உடைந்து ரத்தம் வடிந்தது…
யார் மேல் இந்த கோபம்…??? எதற்காக இத்தனை வெறி…??? என்ற கேள்விக்கு பதில் அவனே
“ஆஆஆஆ…ஏண்டா நீ டான் ஆன…??? ஏன்டா அந்த மீட்டிங் போன…??? போனவன் என்ன மயித்துக்குடா…??? அவளை **** பண்ண…??? அவளுக்கு உன்னால ஒரு நிம்மதியான வாழ்க்கை குடுக்க முடியாம தான… உண்மை தெரிஞ்சும் தள்ளி இருக்க நினைச்ச…!!!! முடிஞ்சுதா…??? சொல்லுடா டான் துரியா…??? ” என ஆத்திரத்தில் ஓங்கி குத்த நான்கடி தள்ளி போய் மீண்டும் அவனிடமே வந்தது
“அவளோட நன்மைக்காக ஒதுங்கிடலாம் இருந்த என்னால அவளை வேற ஒருத்தன் பக்கத்துல பார்த்த போது அப்படியே என் உடம்பு பத்தி கிட்டு எரிஞ்சிது…அவள் இந்த துரியனோட காதலி… எப்படிடா அவளை விட்டு கொடுக்க முடியும்… முடியாது… முடியாது… முடியவே முடியாது…!!!!!” என மூர்க்கத்தனமாக எதிரில் இருந்து மூட்டைவுடன் மோதியவனை இடையிட்டது அந்த சாட்டிலைட் தொலைபேசி அழைப்பு…
வழிந்த வியர்வை வழித்து சுண்டி விட்டவன் கை எரிச்சல் எடுக்க… என்ன…??? என பார்த்தவனுக்கு ரத்தம் வருவதே அப்போதுதான் உரைக்க… அதை துச்சமாக புறம் தள்ளியவன் போனை எடுத்து பேச…
மறுமுனையில் இருந்தது கர்ணன்…
“டேய் துரிய அந்த பொண்ணு கனலினியை காணோமாம் டா…???”என பதறினான்….
“சரி அதை ஏன் என்கிட்ட சொல்ற…!!!”அலட்சியமாக கேட்ட நண்பனை
“நீ எல்லாம் என்ன ஜெனமம்டா… பாவி..சுயநலவதி… சடிஸ்ட்… சைக்கோ… சைக்கு… அந்த பொண்ணுகூட உன் பொண்ணும் தான்டா காணாம போய் இருக்கா… அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் எதாவது ஆச்சுனாஆஆ…???
“ஆச்சுனா என்னடா பண்ணுவ…???” என புருவம் உயர்த்து கேட்டவன் முகத்தில் என்ன இருந்தது சிரிப்பா…???
“கொன்னுடுவேன்டா உன்னையும் கொன்னுட்டு இப்படி ஒருத்தனக்கு நண்பனா கிடைச்ச பாவதுக்கு நானும் செத்து போவேன்….!!!” என ஆவேசம் பொங்க கர்ணன் பேச…
துரியனோ எதோ ஹசியம் கேட்டது போல்…. உரக்க சிரித்தான் “ஹாஹாஹா… பெஸ்ட் ஆப் லக்டா… ஆனா என்ன கொல்ல உன்னாலையும் முடியாதுடா நண்பா…!!!” போனை வைத்தவன் முகத்தில் இன்னும் இருந்தது சிரிப்பு…
அது சாதாரண சிரிப்பல்ல வெற்றி களிப்பு …
உதட்டில் உறைந்த புன்னகையோடு வளைய வந்தவன்…. ஒரு கலைநயம் மிகுந்த பெரிய மர கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல…. விஸ்தாலமான அந்த அறையில் போட பட்டிருந்த மாஸ்டர் பெட்டில்…
அமைதியின் ஸ்வரூபமாய் துயில் கொண்டிருந்தாள் கனலினி… அவளை பார்த்து பெருமூச்சு செறிந்தவன் அருகில் விளையாடி கொண்டு இருந்த மகளை தூக்கி கொண்டு திறந்து வைத்திருந்த பால்கனி வழியே வெளியே சென்றவன் செவிகளை தீண்டியது…???
கடல் அலைகளின் இரைச்சல்…!!!கண்ணுக்கு எட்டிய தூரம் வரை…. கடலின் நீலமும்…உயரே பறக்கும் நீள் சிறகு கடற் பறவைகளும் என ஆயிரத்தி ஐநூறடி பறைகள் மேல் கட்ட அந்த மாளிகை மேல் நின்று ஆதவன் மறையும் அந்த ரம்யமான காட்சியை பார்ப்பது துரியனுக்கு பிடித்தமான ஒன்று…
மாளிகையை சுற்றி போட பட்டு இருக்கும்…. மன்னர்களை மிஞ்சிடும் கோட்டை சுவர்களும் அதில் பொறுத்த பட்டு இருக்கும் ஹை டெக் பாதுகாப்பு கருவியை தான்டி மனிதர்கள் மட்டும் இல்லை பறப்பன ஊர்வன என எதுவுமே அவன் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது… அதுவே துரியனின் ரகசிய சாம்ராஜ்யம்… “மாய தீவு…!!”
எப்பொழுதும் இங்கு வரும் பொழுது துரியன் மனதில் இருக்கும் இறுக்கம் இப்பொழுது இல்லை… காரணம் அவனே அறிவான்…
விமானத்தில் ஏறும் போது இருந்த சக பயணிகள் இப்பொழுது அவள் கண்ணுக்கு ஒருவரும் புல படாமல் போக… சுற்றி தேடியவளுக்கு விடை அளிக்க கூட ஆள் இல்லாமல்… நடுவானில் தனியாக செல்வதை உணர்ந்த கனலினி பிரமை பிடித்து உறைந்து போக…
அவளை மேலும் திகில் ஊட்டும் வகையில் விமானம் பாறைகள் நிறைந்த ஒரு தனி தீவில் நிறுத்தி அவளையும் அவினியையும் இறக்கி விட்டு போய்விட….
என்ன…?? ஏது…?? என விழி பிதுங்கி கனல் தவித்து நின்ற சமயம்… முழு கருப்பு உடை அணிந்த சிலர் துப்பாக்கியுடன்… கனலை பாறைகள் நடுவே அழைத்துச் செல்ல… அங்கே அவள் கண்ட காட்சியில் உறைந்து போனவள்…
வெளி உலகிற்கு தெரியாத அந்த மாளிகையின் உள் சென்றவளுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில்…
உள்ளே உலகின் தலைசிறந்த பாதுகாவலர்களின் புடை சூழ நடுவில் போட பட்டு இருந்த பெரிய நாற்காலியில் துரியனை கண்டவள்… அதிர்ச்சிகளின் உச்சிக்கே சென்றவள் மயங்கி சரிந்தாள்…
எனில் கனலினி…?
ஆம் கனலினி துரியனால் கடத்த பட்டாள்… அதுவும் நடு வானில் வைத்து என்பது தான் கூடுதல் தகவல்…
படுக்கை அறையில் ஓசை வர உள்ளே சென்றவன்… அங்கு போர்வைகுள் அஞ்சி நடுங்கியபடி விழித்து இருந்த கனலினியிடம் வந்தவன்…
அட்டகாசமான அரக்க சிரிப்போடு… அவளை பார்த்தவன்… “ஹாஹாஹா..வெல்கம் டு மை மாயதீவு…காமினி மை ஸ்வீட் ஹார்ட்…!!!” என இடி முழக்கத்தோடு வரவேற்றான்…
பகல் கனவு பலித்ததோ…???


