முகிலே!! உன் முகவரி என்ன-15

சர்வ அலங்காரத்துடன் கண்ணாடி முன் அமர்ந்திருந்த முகிலினி தன் அலங்காரத்தைச் சரி பார்த்துக்கொண்டு இருக்க, அவசரமாக உள்ளே நுழைந்தான் முகிலின் சகோதரன் ஆக்கபட்டவன்…

“என்ன முகில் இது…?? இங்க என்ன நடக்குது…?? என்ன பண்ற நீ? எனக்கு எதுவுமே புரியல…?” ஆற்றலாக வெளிப்பட்டது அவன் கேள்வி.

“என்ன புரியல…?? நான் ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடியாயிட்டு இருக்கேன், பார்த்தா தெரியல…?” என்றாள் கழுத்தில் ஒரு நகை மாட்டிக்கொண்டே…

“ஏய் விளையாடாத முகில்! நிஜமாவே எல்லாத்தையும் ஏத்துக்கிட்டு அவன் கூட குடும்பம் நடத்தப் போறியா…?” என கோபத்துடன் அவன் கேட்க..

அவளோ கூலாக பால் சொம்பை கையில் எடுத்துக்கொண்டு ஸ்டைலாகத் திரும்பி கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துத் திருப்தி கொண்டவள்…

“வழி விடு, நேரமாச்சு! அவர் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பார்…!!” என்றவள் தளுக்கித் தழுவி நடை பழக…

அவள் கையை பிடித்து இழுத்தவன்… “ஏய், உன்கிட்ட தான பேசிட்டு இருக்கேன்! என்னை பார்த்தா எப்படி இளிச்சவாய் மாதிரி தெரியுதா, ஹான்…?” என அவன் ஆத்திரம் கொண்டு கேட்க…

“ஹே, அது அப்படி இல்லை…!!” என முகில் அவனைச் சமாதானம் செய்ய முயல, சமையலறையிலிருந்து இவள் அறைக்குள் சாமுண்டீஸ்வரி, சகுந்தலா, மலர்விழி மற்றும் குறிஞ்சி சகிதம் உள்ளே நுழைந்தபோது கண்ட காட்சி, முகிலும் அந்த ஆடவனும் கட்டிப்பிடித்து நிற்பது போல் அமைந்து போனது… அதைக் கண்டவர்கள் அதிர்ச்சியில் நிற்க…] ,

நிலைமையைச் சகஜமாக்கும் பொருட்டு, “வாங்க அத்தை… வாங்க பாட்டி…!” என இன்முகத்துடன் அவர்களை வரவேற்றவள்…

“அத்தை, உங்ககிட்ட சொல்ல மறந்துட்டேன்… இதுதான் என் தம்பி…!!!” என அந்த ஆடவனை அறிமுகம் செய்த பின்னரே சகுந்தலாவிற்கு மூச்சு வந்தது… கூடவே நிம்மதியும்…

“எது, தம்பியா…?” என அந்த ஆடவன் தயக்கத்துடன் பல்லை கடிக்க…

“ஷ், ஆமா, தம்பிதான்…!!” என அவனை அடக்கியவள், வந்தவர்களைப் பார்த்து இளித்து வைக்க…

“எந்த ஊர்ல அக்காவும் தம்பியும் இப்படி கட்டிக்கிட்டு நிக்குறாங்க…?” என சாமுண்டீஸ்வரி சந்தேகமாக கேட்க…

“அ..அவன் அப்படித் தான் பாட்டி, சின்னதுல இருந்தே நான்தான் அவனுக்கு அதிக பிரியம்… இல்லடா தம்பி…!!” என சமாளிக்க நினைக்க…

அவன் பதிலுக்கு ஏதோ கூற வரும் முன் அவன் கையை இறுகப் பிடித்துக் கொண்டு அடக்கினால் முகில்…

“அப்படியாமா முகில்… தம்பி உன் பேர் என்னப்பா? உங்க அப்பா அம்மா என்ன பண்றாங்க…?” என சகுந்தலா கேட்டதிலே தெரிந்துவிட்டது அவர் எவ்வளவு முகிலை நம்புகிறார் என்பது…

“அது…” என அவன் தொடங்குவதற்கு முன்பே… முந்திவிட்ட முகில்…

“அ..அத்தை எங்களுக்கு அப்பா அம்மா யாரும் இல்லை. சின்ன வயசுல இருந்தே அவனும் நானும் தான் வாழ்ந்துட்டு இருக்கோம். இதையெல்லாம் அப்போவே பஞ்சாயத்துல சொல்லிட்டேனே அத்தை…??!” என மெய் பொய்யையும் கலந்து கூற, உருகிவிட்டாள் சகுந்தலாவிற்கு…

“அச்சோ மன்னிச்சுக்க கண்ணு, நான் ஒரு கூறு கெட்டவ. ஏதோ ஒரு ஞாபகத்தில் கேட்டுட்டேன்…!!!” என சகுந்தலா பாசத்தில் பரிதவிக்கவும்…

“ஐயோ அத்தை, இதுல என்ன இருக்கு? என்கிட்ட போய் மன்னிப்பு கேட்டுகிட்டு… உங்களுக்கு ஆயிரம் சிந்தனை இருக்கும், அதுல இத மறந்து இருப்பீங்க, அதுக்கென்ன… நாங்களும் உங்க புள்ளைங்க மாதிரி தான், நீங்க தானே சொன்னீங்க…!!” என பதறித் தடுத்தாள் முகிலினி… சகுந்தலா அதை ஆமோதிக்க…

சாமுண்டி “அதெல்லாம் இருக்கட்டும்….!” என்றவர், முகிலின் தம்பியாக்கப்பட்டவனைச் சுற்றி வந்து ஆராயும் கண்ணோட்டத்துடன் பார்த்தார்… “டேய் பொடியாரே, உனக்கு என்ன பேர் தான்டா வச்சிருக்கேன்னு சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே? அதை விட்டு இந்த ரைட்டர் ஆடவன் அந்நியன்னு உனக்கு பில்டப் கொடுத்துட்டு இருக்கா…???” என்றார் அவனை மேலிருந்து கீழே வரை பார்த்து…

“ர.. ரஞ்சன் பாட்டி…!!” என்றாள் முகில் முந்திச் சென்று…

“ஓ ரஞ்சனாஆ… நான் கூடக் குட்டி ****!!” என பாட்டி இழுக்க…

“என்ன சொன்னீங்க…?” என ரஞ்சன் பாட்டியை முறைக்க…

“என்ன சொன்னாங்க? உன் பேரைத்தான் சொல்லிப் பார்த்தேன், அதை விடு உன் வயசு என்ன…? நீ என்ன படிச்சிருக்க…??? என்ன வேலை பார்க்கிற…???” என பாட்டி தோண்டி துருவ…

“பாட்டி, இதெல்லாம் இப்போவே கேட்டுத் தெரிஞ்சிக்கணுமா என்ன…?? எனக்காக அங்க அவர் காத்திட்டு இருப்பார்…!!” என கூறிய முகில், வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள்…

“ஆமா அத்தை, எதுக்கு வந்தோம்ன்னே மறந்துட்டு நின்னுட்டு பேசிட்டு இருக்கோம்… அங்க பெரியவன் காத்துட்டு இருப்பான், சீக்கிரம் வாங்க, பிள்ளைய வாழ்த்தி அனுப்பி வைப்போம்…!!” என்றவர், மாமியார் கையில் அர்ச்சனையைத் கொடுக்க…

“கொள்ளு பேரப்பில்லை தான், நாங்க கூட இருந்து பார்த்துக்க முடியாம போச்சு. சீக்கிரமே ஒரு பேத்திய ரெடி பண்ணி கொடு, நாங்க பார்த்துக்கறோம்…!!” என வாழ்த்தி, செல்ல மலர்விழியும் சகுந்தலாயும் ஆயிரம் அறிவுரை சொல்லி முகிலை முதலிரவு அறைக்குள் அனுப்பி விட்டனர்…

புலியின் கூண்டுக்குள் தனித்து விடப்பட்டது போல் முகிலுக்கு வயிரெல்லாம் பிரட்டத் தொடங்கியது. இருப்பினும், தாமரை பாதங்களை எடுத்து வைத்துத் தளிர் நடையிட்டு வந்தவள், நடையில் தடைபட்டுப் போனது, பட்டு வேட்டி சட்டையில் அம்சமான ஆணழகாக நின்ற விஜயேந்திரனின் பக்கவாட்டுத் தோற்றத்தில்…

கன நேர தயக்கத்திற்குப் பின் மெல்ல அன்ன நடையிட்டு கட்டில் அருகே வந்தவள், பால் சொம்பை வைத்துவிட்டு விஜயேந்திரனை அழைக்க அவனை நெருங்கியவள்; தொண்டையில் கிச் கிச் எனத் தொண்டையை கணைத்து அவள் இருப்பைக் காட்டக் கவனித்தான், இல்லை…

அவளோ விடாமல் மீண்டும் மீண்டும் கணைக்கத் தொண்டை வலி வந்தது தான் மிச்சம்; அவன் பார்த்தான், இல்லை…

தூங்குபவர்களை எழுப்பி விடலாம், தூங்குவது போல் நடிப்பவர்களை எங்க நாம எழுப்ப… முகில் உள்ளே வந்தது முதல் விஜயேந்திரனின் ஓரப்பார்வை அவளைத் தான் தொடர்ந்து கொண்டிருந்தது அவள் அறியாமல்… அவளாக அவனை அழைக்க வேண்டும், அதுதான் அவன் எண்ணம்…

அவள் முக்கி முனகி பார்த்துவிட்டு, ‘விஜய்’ என அழைக்க அவன் தோளைத் தான் தொட்டாளோ… அடுத்து என்ன நடந்தது, ஏது நடந்தது என அவள் கிரகிக்கப் போவதற்கு முன்பே, கட்டிலில் விஜயனுக்கு அடியில் மலர்ச் சென்டாக நசுங்கித் தவித்தாள்…

“ஹா….!” என அவள் முகம் அதிர்ச்சியை அப்பட்டமாக எதிரொலித்தது…

அவள் நாடியைத் தொட்டுத் தூக்கியவன், “என்ன…?” எனப் புருவத்தை உயர்த்தி கேட்க, “ம்ஹும்…!!” எனக் கண்ணை மூடிக்கொண்டவளின் நெற்றியில் ‘முச்ச்’ என்ற ஈர முத்தத்தில் விழிகள் மேலும் இறுக மூடிக்கொள்ள, அவ்விரு மொச்சை விழியிலும் தலா ஒரு முத்தம் விழுந்தது. சிறுகதையாகத் தொடங்கித் தொடர்கதையாகிப் போனது; முத்தங்களின் வரிகள் பெருகியதே தவிர, கழித்தல் கணக்கிற்கு அங்கு வேலையில்லை…

வன் கைகள் கொண்டு, மூடிய முல்லைப் பந்துகளை அமுக்கிவிட, “ஹாவ்வ் ஸ்ஸ்…!” என வலியில் உதடு கடித்தவளின் இதழை அவன் சொரசொரப்பான நாவால் வட்டமடித்து உறிஞ்ச, உதடு வழி உயிர் திறந்தது பெண்ணவளுக்கு…

மார்புத் திரையைத் தூக்கி எறிந்தவன், முகத்தை முல்லைத் தேசத்தில் சரண் புகுத்தியவன், அவளது கைகள் அவள் புடவை கொசுவத்தில் நுழைந்தன… அவள் ஆலிழை வயிற்றில் நண்டு பிடிக்க… “அம்ஹாஸ்ஸ்…” என்றவள் வளைந்து வளைப்பொந்துக்கு வழி கொடுத்தாள், இன்னும் வேணாலும் பிடிச்சிக்கட என்கிற ரீதியில்…

முத்தமிட்டு முத்தமிட்டு முக்தி பெற நினைத்தவன், முகிலின் சந்தனக் கட்டை தேகத்தில் தாயாக உருண்டு வந்தவன், அவள் நாபி குழியில் முகத்தை அழுத்திப் புதைத்தவன், கைகள் எல்லைத் தொடா கொடுகளை எட்டிப் பிடித்த மறுநொடி, பெண்ணவளின் உடல் முழுமையாக மாறியது…

உடல் எஃப்பாக விரைக்க, விலுக்கென்று விலகி எழுந்தான் விஜயேந்திரன்… பெண்ணவளோ ஆணின் கையில் பெண்மையை விட்டுக்கொடுத்து, உணர்வு மிகுதியில் உச்சம் எட்டிப் பிடிக்கப் போன சமயம், அவன் விலகல் கூட உணர முடியாமல் கிடந்தவள்… வீணையின் நரம்புகளாக மீட்டப்பட்ட உணர்வுகளை அடக்கி, விஜயனை கேள்வியாக நோக்க, அவனும் அவளைத் தான் பார்த்து இருந்தான்…

“ஏன்…?” என்ற கேள்வி பெண்ணின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது…

அவள் மீது சேலையை எடுத்துப் போர்த்தியவன்…

புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து வாழ ஆயிரம் காரணங்கள் இருந்தாலும்… “இவன் என் புருஷன், என்னை கைவிடமாட்டான்” அவனும்… “இவள் என் மனைவி, என்னை ஏமாற்ற மாட்டாள்” அவளும்… ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருக்கற நம்பிக்கை அடிப்படையில் தான் அவங்க வாழ்க்கையே தொடங்குது. அந்த நம்பிக்கை என் மேல உனக்கு இருக்கா…??” என்ற விஜயேந்திரனின் கேள்விக்கு அவள் மௌனமாக இருந்தாள்…

“சொல்லுடி, உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கா…?” என அழுத்தி கேட்க… முகிலின் தலை தானாகக் குனிந்து கொண்டது…

“இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காவது உனக்கு என் மேல நம்பிக்கை வரும்… வர வைப்பேன் அதுவரை நான் காத்துட்டு இருக்கேன்…!!” என்றவன் விறுவிறுவென வெளியே போய்விட்டான்… முகிலினி “கொஞ்சம் பொறுங்க…!!” என்ற வாக்கியத்தை காதில் வாங்காமல்…

காத்திருப்பது அவனுக்கு ஒன்றும் புதிதல்ல… விஜயேந்திரன் எதிர்பார்ப்பது அவளின் நம்பிக்கை மட்டும் அல்ல, அவள் காதலையும் தான்… அவனைப் பொறுத்தவரை காதலும் நம்பிக்கையும் வேறு வேறு அல்ல… காதல் இருக்கும் இடத்தில் நிச்சயம் நம்பிக்கை இருக்கும், அதே போல் நம்பிக்கை இருக்கும் இடத்தில் அன்பு இருக்கும்… விஜயேந்திரன் எதிர்பார்த்த நம்பிக்கையும் காதலும் அவனுக்குக் கிட்டுமா…??

கிட்டுமா இல்லனா உனக்கு கிட்னி இருக்காது அதான… ஹிஹி அடுத்த எபிசோடில் பார்ப்போம்…

ஏய், இந்த ரொமான்ஸ் எபி தாரேன் சொல்லிட்டு, பிட்டு சீனை பிட்டா போட்டு போனா என்ன அர்த்தம்…

என்ன அர்த்தம்… ஆ சீன் இக்கடலேது அர்த்தம்… கண்ணாயிரம் வாசகர்கள் வெப்பன்ஸ் எடுக்குறதுக்குள்ள… விடு ஜூட்

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top