மதுரம் சிந்தும் காதலே-22

சண்டைகாரி சத்தத்தையெல்லாம் அயராமல் உறவாடியே குடித்தான் அவளின் ட்ராகுல…

மறுநாள் விடுமுறை என்பதால்… ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு உறங்கினர்..

பாவம் சிவகாமி தான், இரு நாட்டு தலைவர்களை உள்ளே அனுப்பினோமே, என்ன ஆச்சோ ஏதாச்சோ என கவலையில் முழ்கிப் போனார்….

காத்திருந்து காத்திருந்து

காலங்கள் போகுதடி

பூத்திருந்து பூத்திருந்து

பூவிழி நோகுதடி என வாசலையே பார்த்து இருக்க

திறக்காத அலிபாபா குகை கதவு திறந்தது…

முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் உடற்பயிற்சி அறைக்குள் சென்று விட…. நிறைய எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே…

சரி அடுத்த டிக்கெட் கிட்டயாவது ஏதாவது தேறுமா எனப் பார்க்க…

அவரது எண்ணத்தை தவிடு பொடியாகவே, அல்லி ராணி அம்சமாக குளித்துவிட்டு எதுவுமே நடக்காதது போல்… சமையல் அறைக்குள் சென்று சமைக்க….

“அடடே சிவகாமி… நேத்து போட்ட வெடி பத்தலை போல…. ரெண்டு கொஞ்சி குளாவிக்கிட்டு வரும்னு பார்த்தா… திக்குக்கு ஒரு ஆளா போதுங்க…. இது சரிப்பட்டு வாராது…. இன்னைக்கு வேற வழியில் முயற்சிக்க வேண்டியது தான்…!!” என யோசித்தவற்கு அது பலனைத் தராமல் போக….

“ஐயோ அவசரதுக்கு ஒரு யோசனையும் வர மாட்டிங்குதே… பேசாம நம்ம வீர் கிட்ட பேசி சார்ஜ் ஏத்திகிட்டு வந்து வச்சிக்கலாம்….!!” என நியூயார்க் டு தேனிக்கு கால் போட்டு இங்கிருந்தே அங்கே அனைத்தையும் ஆட்டிப்படைக்கச் சென்று விட்டார்….

பாவம் அவருக்கு எங்கே தெரியப் போகுது, இரண்டு அமுக்குணியும் நேத்தே அவருக்கு கொள்ளுப் பேரனுக்கு ஆர்டர் போட்டுவிட்டனர் என்பது….

உடற்பயிற்சி செய்துவிட்டு, வேர்வையைத் துடைத்துவிட்டு வந்த தனஞ்சயன்….

கிட்சனில் மனைவி மட்டும் தனியாக இருப்பதை கண்டவனுள்… நேற்றைய இரவு வந்து இம்சிக்க… பாட்டியின் அறையை எட்டிப் பார்க்க அவர் போனிலே பசு மாட்டுக்கு பிரசவம் பார்க்க… எப்படியும் இப்போ முடியாது என கணித்து, சிவகாமி அறையைச் சாற்றி வெளியே பூட்டுவது அவன் முறை ஆகியது…

தூக்கிச் சொருகிய கொண்டையும்… குளித்து உடலில் ஈரம் இருக்க… அவள் அணிந்து இருந்த டீ-ஷர்ட் எடுப்பாகக் காட்ட… முழங்கால் வரை த்ரீ-போர்த் அணிந்து… மும்மரமாகச் சமைத்துக் கொண்டு இருக்க…

அடுப்பின் அனலில் வியர்வை பூக்கள் பூத்து… ஒவ்வொன்றாக உருண்டு அவள் கழுத்தில் இறங்கி… பாதை அமைத்து அவள் உச்சி முகட்டை அடையவதை… கண்களில் கிறக்கம் கொண்டு பார்த்தவன்….

அவள் பின்னால் வந்து நிற்க… அவன் விடும் உஷ்ண மூச்சுகளால் அவனை கண்டு கொண்டவள்… கை நின்று பின் வேலையைத் தொடர….

கைகளை முன்னால் விட்டு அவள் இஞ்சி இடை பிடித்து தன்னோடு அணைத்துக்கொண்டவன்… அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்து… அவள் நறுமணத்தை நுகர்ந்து கொண்டே நாசியல் கோடு வரைந்து, தன்னை மதியாமல் வேலை செய்பவளைச் செல்லச் சேட்டைகளால் இம்சை பண்ண… அவளோ….

“என்னமோ பண்ணு, நான் வேலையை முடிச்சிட்டு தான் வருவேன்..” என வெகு சிரத்தையாகச் செய்ய… பொறுத்து பார்த்தவன்… வேர்வையில் மினுமினுத்த அவள் கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் கடித்து… உறிஞ்ச…

அதுவரை அவன் செய்வதை நமுட்டு சிரிப்புடன் உதடை கடித்து அடக்கியவள்….

“ஹாவ்…மாமாஆ…!!” அவன் ட்ராகுல தாக்குதலில் நிலை குலைந்து அவன் மேல் பின்னால் சாயினால்,

அது அவனுக்கு வசதியாகப் போய் விட, அவன் இதழ்கள் கழுத்தில் இருந்து கீழ் இறங்கி அமிர்த கலசம் வரை உள்ள வியர்வையை அவன் நாவு கொண்டு துடைக்க…

“ம்ம்ம்ம்…மாமா…சமைக்கணும்..??” என அவன் சீமாட்டி சிணுங்க…

“போடி, எனக்கு வேணும், நல்லா மனமா இருக்கு…!” மீசை வைத்து உரச…

“ஸ்ஸ்ஹா…மாமா குத்துத்து…மீசை…”

“நேத்தும் குத்துச்சாடி……” என கரகரப்பாகக் கேட்க…

“ம்ம்… காயம் ஆகிப்போச்சு மாமா…!!” என்றதும் அவளிடம் இருந்து பிரிந்து அவளைத் தூக்கி அடுப்புத் திண்டில் அமர வைத்தவன்… அவள் இரண்டு காலையும் பிரித்து அதற்கு இடையில் நின்று கொண்டு…

“எங்கடி காயம் ஆச்சு??” என அவள் முகத்தை ஆராய…..

“இங்க மாமா..” என டீ-ஷர்ட்டை இறக்கி அவன் கையில் சிவந்த செம்பருத்திப் பூக்களைக் காட்ட…

காட்டிய இடத்தில் அவன் நகமும் மீசையும் வண்ண ஓவியம் வரைந்து இருக்க… அதை கண்டவனுக்குள் வெட்கம் எடுக்க… அதை லகுவாக மறைத்தவன்…..

“பாப்புக்கு வலிக்குதா? மறந்து போட்டு விடவா??” என விரலால் வருடி கொண்டே கேட்க….

அவன் கண்களைப் பார்த்து கொண்டே… “ம்ம்ம் போடு மாமா..” என குழந்தையாகத் தூக்கி காட்ட…

நொடியும் தாமதிக்காமல் ஆடையின் வெளியே ஆம்பலை எடுத்து எச்சில் கொண்டு மருந்திட…

“ஸ்ஸ்.. ஹ்ம்ம்…!” எனத் தலைமுடியைப் பிடித்துக் கொண்டு ஊக்குவிக்க…

மெல்ல அவளைப் பார்த்து கொண்டே… நாவினைத் துரிகையாகக் கொண்டு அவன் தீண்ட

“ஸ்ஸ்.. ஹாக் ஹம்..” என முனகல் வர.

“வலிக்குதாடி??” என கேட்க…

இறுகக் கண் மூடி இருந்தவள்… அறைக்கண் போட்டு அவனைப் பார்த்து கொண்டே… “ஷ்… ஜில்லுனு இருக்கு மாமா…!!” என அவனை மார்போடு சேர்த்து அணைத்துக்கொள்ள… மயங்கித்தான் போனான்….

ஒரு கையால் அடுப்பை அணைத்துவிட்டு… இரு கைகளால் அவள் காலை இழுத்துத் தன் இடுப்போடு சேர்த்துத் தூக்கிக்கொண்டவன்… கள்ளுண்ட வண்டாக மாறி அவளிடம் மகரந்தச் சேர்க்கை நடத்த…

அறைக்குத் தூக்கி வந்தவன் அவளைக் கட்டிலில் உருட்டிவிட்டு அவள் மீது பாய… இரு கரம் விரித்து அவனை அணைத்துக்கொண்டவள்…. அவன் கேட்டதை ஏந்தி கொடுக்க…. புதுக் காயம் தந்து அதற்கும் அவனே எச்சில் மருந்திட்டு… அவளைக் கட்டிலில் துள்ள வைத்துத் துடிக்க வைக்க….

“ஸ்ஸ்…ஹா. ன்ன்ன்ன்… மாமா…” என அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டே அவனைத் தன்னுள் வாங்கி… அவன் மீதான அவள் காதலைக் காட்டிவிட முனை…

அவளின் இந்த அணுகலில் அவள் தன்னை ஏற்றுக்கொண்டதைக் கண்டு கொண்டவன்…. இரட்டிப்புச் சந்தோஷத்தில் அன்று முழுவதும் அவளை மோகத்தில் குளிப்பாட்டினான்…..

மதுராவிற்கு காதலா…???

ஆம் காதல் தான்… அவளே அறியாத வயதில் வந்த புரியாத காதல்…. எப்போது கண்டாள்….??? குமரியாகச் சமைந்த போது, குருத்து ஓலை கட்டும் போது, அரும்பு மீசையில் குறும்பாகச் சிரித்துச் சிறை இட்டதே அப்போதா..??

அல்லது அவளுக்கு எது பிடிக்கும் என்பதைக்கண்டுபிடித்து யாருக்கும் தெரியாமல்… அவள் கை தீண்டிவிட்டுப் போன முதல் ஆண் மகனாக அவனைக்கண்டாள்… இல்லை அவனை முழு ஆணாக அவள் முன்னால் வந்து ஒவ்வொரு அசைவிலும் கொல்லை இட்டதே போதை அவள் அறியாள்…. அல்லது அன்று பால்கனியில் வைத்து அவளைத் தீண்டியதே போதா…..?? தெரியாது…

ஆனால் அவன் பால் சாயும் மனதை, அவன் மீதுள்ள கோபத்தையும்… அவனைத் தன் அக்காவின் மாணவனாகவே… நினைத்து ஒதுக்க முடிந்ததை நினைத்துப் பார்த்தாள்… அவன் மார்பில் உள்ள முடியில் விரலை வைத்து அலைந்து கொண்டே….

இது கனவா..?? நிஜமா..??? என யோசித்தவள் எட்டி அவன் நெற்றியில் முத்தம் வைக்க… தூக்கத்திலே சிரித்தவன் கண்ணைத் திறக்க… அங்கும் வைத்தாள் ஆசை முத்தம்….. அடுத்தது… கன்னம்… மூக்கு.. வாய்.. என வரிசையாக வழி நடத்தி வந்தவன்….

அவன் திண்மையான மார்பைக் காட்ட….

சிரித்துக்கொண்டே முத்தம் வைத்தவள்.. அவன் மார்ப சதையை கடித்து அவன் தூங்கும் நடத்தையை முடிவுக்கு கொண்டு வந்தாள்…

“ஆஆஆஆ..!!” என அலறியவன்… அவளை புரட்டி போட்டு…

“என்னடி இது..!!” என அவள் பல் பதிந்த பதக்கத்தைக் காட்ட…

“அப்படி கடிப்பேன் ட்ராகுலா…!!” என மிதப்பாகச் சொன்னவள், அடுத்து வாயைத் திறந்து கடிப்பது போல் காட்ட….

“ட்ராகுலா எப்படி கடிக்கும் காட்டுரேண்டி…” என்றவன்… “கடிப்பியா..?? கடிப்பியா?” என கேட்டே… அவளில் மிச்சம் வைக்காமல் கடித்து ருசிக்க…. அடுத்து அந்த அறை முழுவதும் இருவரின் அலறல் சத்தமும் மட்டுமே… மோகன ராகமாக…. முழங்கியது…

காதலில் மதுரம் கண்டனர்….

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top