மதுரம் சிந்தும் காதலே-11

சுற்றித் திரியும் மின்மினிப் பூச்சிகள் அந்த நியூயார்க் நகரம் முழுக்க வண்ண வண்ண ஒளியில் இரவில் ஜொலித்தன….

அதை ரசிக்கும் மனநிலையில் மதுரா இல்லை….

அவள் உடல் அங்கம் அனைத்தும் இத்து விடுவது போல் வலி எடுக்க, பஸ் ஸ்டாப்பிலிருந்து இறங்கி தள்ளாடியபடி நடந்து வந்தவள்…..

ப்லோரா வர இரவு ஆகும் என்பதால், இவளிடம் மற்றொரு சாவியை கொடுத்து வைத்திருந்தாள்….

தன்னிடம் இருந்த இன்னொரு திறவுகோல் மூலம் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக….

அங்கு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து இருந்த உருவத்தைப் பார்த்து அதிர்ந்தாள், ஆனால்…. அது வெறும் ஒரு நொடியே…..

பின்பு இயல்புக்கு வந்தவள்….. சாதாரணமாகவே நடமாடினாள்…..

அங்கு ஒரு உருவம் இருப்பதை பொருட்படுத்தாமல்…. அவள் கைப்பையை அவன் அருகில் போட்டு விட்டு…. அவளின் அறைக்குச் சென்று கதவை கூட அடைக்காமல் உடை மாற்றினாள்….

பின்பு வெளியே வந்து தனக்கு ஒரு ஹெல்த் ட்ரிங்கை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்துக்கொண்டு சோபாவில் அமர்ந்து இருந்த ஜெய்யின் உருவம் அருகே உட்கார்ந்தவள், டிவியை ஆன் செய்து பார்க்க ஆரம்பித்தாள்.

சேனலை மாற்றி மாற்றிப் பார்த்தவள் எதுவும் பிடிக்காமல் போக, அருகே இருந்த உருவத்திடம் திரும்பி…

“இன்னும் எவ்வளவு நேரம் தான் நீ என் கண்ணுக்குத் தெரிவ மாமா…?” என கேட்டவளை வினோதமாகப் பார்க்க,

அவனிடம் இருந்து எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் இருக்க,

அவன் தேக்கு மரத் தொடைகளுக்கு இடையே குறுக்காக ஏறி அமர்ந்தவள், அவன் கழுத்தில் கை இட்டு பிடிமானமாகப் பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்.

“ஏன்டா நீ என் கண்ணுக்கு மட்டும் தெரியுற…? யார்டா நீ என் மாமாவா இல்லை அந்த சோ கால்டு பொறுக்கி ஜெய்யா…?” என கேட்டவள், தன் ஆலங்கட்டி ஆள் காட்டும் விரலை அவன் முகத்தில் உறவாட விட்டவள்.

“ஏன்டா இந்த கண்ணு… மூக்கு… மீசை… உதடு… முகம் எல்லாம் என் காட்டான் மாதிரி இருக்கு…. ஆஆ என்னடா ஏதோ குத்துது….!!!” என அவள் அங்கு இருப்பது நிழல் விம்பம் என நினைத்து…

எதிரில் உள்ளவனைத் தொட்டுத் தொட்டுப் பேசி, அங்கே அவன் உணர்வுகளைச் சிக்கி முக்கி கல்லாகப் பற்றி எரிய வைத்துக்கொண்டு இருந்தாள்….

அவள் வந்ததும் தன்னைப்பார்த்து அதிர்ந்து நின்றிருப்பதை எதிர்பார்த்தவன்… போல் சிரித்தான்… அவளை வச்சு செய்யலாம் என நினைத்துப்பார்த்தான்….

அவளோ அவனைச் சாதாரணமாகக் கடந்து அறைக்குள் சென்று ஆடையை மாற்ற குழப்பமாக உட்கார்ந்திருந்தாள்; அவளைப் பார்வையால் பின் தொடர்ந்தவன்… கண்கள் அதிர்ச்சியைத் தத்தெடுத்தன….

ஏனெனில் அவன் மனைவி கதவைத் திறந்து வைத்து ஆடை மாற்ற அவன் இளமை சோதித்தாள்…. தடுமாறியவன் திரும்பிப் பார்க்கையில்… விட்டேனா பார் என அவன் மனைவி உருவம் அவன் எதிரில் இருந்தது இன்ச் எல்.. ஈ. டி… டிவியில் அவள் ஒலி வடிவில் தெரிய….

முதலில் தவித்து அவளிடம் சொல்லிவிடலாமா என நினைத்தவனுக்கு…. “அட லூசே!

.. அவள் உன் பொண்டாட்டி தான், உனக்கு உள்ள போய் பார்க்கக் கூட உரிமை இருக்கு….!!” என நினைவுக்கு வந்ததும்….

தன்னை மறந்து அவன் கண்கள் எதிரில் இருந்த டிவியை வெறிக்க ஆரம்பித்தன…. அதில் தெரிந்த அவளின் சாக்லேட் சிலையைப் போல அவள் உருவத்தை மிடறு விழுங்கிப் பார்த்தான்…..

அவன் செல்கள் தாறுமாறாக…. துடித்து வெடிக்க… தயாராக… இன்னும் முடியல கண்ணா என அவன் மனைவி… அவன் அருகில் அமர்ந்து அவன் தொடையில் கை வைத்து டிவி பார்த்துக் கொண்டு, அதில் ஓடியதை பார்த்துச் சிரித்தாள்….

மூச்சு விட மறந்த சிலையாகச் சமைந்தவன்….. முதலில் அவள் தெரிந்தே செய்கிறாள் என நினைத்தவன்……. அவள் பேச்சில் அவள் தன்னை நிழல் உருவமாக நினைத்துச் சேட்டை செய்கிறாள் எனப் புரிந்து சிரித்துக் கொண்டவன்… எது வரை போகிறாள்… என அவன் ஆசை கொண்டு.. பார்க்கும்போது, மடி மீது ஏறி அவள் அமர்ந்ததும் அவன் இளமை கண் விழித்து தன்னை எழுப்பியது யார் எனப் பார்த்தான்….

அவனுள் கொதித்த மோகத் தணல் வெளியே அனல் காற்றாக அவள் கழுத்து வளைவில் வீசியது….

அதில் திடுக்கிட்டு அவன் கண்களை நேராகப் பார்க்கும்போது…. தாபம் நிறைந்த அவன் கண்கள் அவளை மந்திரம் போட்டு இழுக்க, அந்தப் பார்வைக்குள் அவள் கட்டுண்டு கிடந்தாள்….

அவளை இப்பொழுதே துடிக்கும் தன் இளமைக்கு உணவாக எடுத்துக்கொண்டால் என்ன என எண்ணம் தோன்றி ஆணைத் தகிப்பதாக இருந்தது…

அவளை நோக்கி முன்னேறிய தடித்த அதரங்களை…. பார்த்தவள்… தடுக்கவும் தோன்றவில்லை… விலகவும் தோன்றவில்லை… அமர்ந்து இருக்கவே…

இதழும் இதழும் உரசி கொள்ள… நூல் அளவு மட்டுமே இடைவெளி இருக்க….

“கிளிக்” என கதவைத் திறந்து கொண்டு…. டக் டக்…. என ப்லோரா உள்ளே வர….

அங்கே வரவேற்பு அறையில் இவர்களைப் பார்த்து, கையில் இருந்த பொருட்களைச் சிதறவிட அந்தச் சத்தத்தில் இதழை விலகி அவளைப் பார்க்க….

“ஹாய் ப்லோரா… வா..!!” என ஜெய்யை மேலும் அணைத்துக்கொண்டு சாதாரணமாக வரவேற்க…

“என்ன மது இது…. நீ இந்தியப் பொண்ணு… நீ இப்படிலாம் நடந்துக்குவ என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை…!!” என அப்பட்டமாக முகத்தில் அதிர்ச்சியைத் காட்டி ப்லோரா பேச….

“என்ன..” எனப் புரியாமல் ஒரு முறை ஜெய்யைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவளிடம்…..

“என்ன ப்லோரா சொல்ற….??”

“இங்க பாரு மது… இது ஜெய்யின் வீடு… நீங்க ரெண்டு பேரும் என்னமும் பண்ணிட்டு எப்படியும் இருங்க…. நான் ஜெய் சார் கிட்ட… அவர் வீட்டுச் சாவியை கொடுத்துட்டுப் போகத்தான் வந்தேன்…!!” என்றவள் ஜெய்யைப் பார்க்க… அவளுக்கு ஜெய் மதுராவின் கணவன் என்பது தெரியாமல்…. காரமாகப் பேசிவிட…

“தேங்க்ஸ் ப்லோரா என் ப்ரோபர்டியைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டதற்கு….. இதுக்கான உபகராம் உன்னோட அக்கௌன்ட்ல ஏற்றியாச்சு….!!” என்றவன்

ப்லோராவை அனுப்பி வைத்துவிட்டு, மடியில் அதிர்ச்சி விலகாமல் புல்லு கட்டாகக் கிடந்தவளைப் பார்த்து கண்ணடிக்க…

“ஆஆஆஆஆஆ…!!” என கத்திக்கொண்டு துள்ளிக்குதித்து எழுந்தவள்…

“நீ… நீ… நிஜமா?” என கண்ணைக் கசக்கிக் கொண்டே கேட்டவள்… அவனைத் தன் கையை நீட்டித் தொட்டுப் பார்க்க…

நீட்டிய கரங்களோடு வளைத்து அணைத்துக்கொண்டவன்…

“நான் நிஜம்தான் என்று என் ஸ்டைலில் நிரூபிக்கட்டுமா…. என்னடி பார்க்க முருங்கை குச்சி மாதிரி இருக்க…. ஆனா உள்ள எல்லாம் இப்படி வளர்த்து வச்சிருக்க…. ப்பா அப்படியே ஏஏஏ…!!” அதை அவள் காதில் மீசை உரசி கூசும்பாடி சொல்ல…

சசீ! பொறுக்கி, கொன்றுவேன்டா உன்னை…. விடு என்ன… யார்டா நீ? எதுக்குடா உள்ள வந்த? போடா வெளிய… இல்லை போலீஸ் கிட்ட பிடித்துக் கொடுத்துவிடுவேன்….!!” என அவள் திமிர…

“போடி… போய் சொல்லு….” என அவளைத் தள்ளிவிட்டு மீண்டும் மெது நாற்காலியில் தோரணையாக அமர்ந்து…

“என்ன நிக்கிற? போய் புகார் கொடு, அங்கேயும் உன்னைத்தான் லூசு போலப் பார்ப்பான்…!!” என எள்ளலாகச் சொல்ல, தயங்கி நின்றாள்… ஏன் என்பது போல்…

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top