“ஒரே நாள்ல இன்னும் எத்தனை ஷாக் டா குடுப்பீங்க….???!!” என குமுறும் அளவுக்கு மதுராவை வைத்து செய்யத் துவங்கி இருந்தான் தனஞ்ஜெயன்….
தன் அறைக்கு வந்த மதுராவை சிறிது நேரம் கூட அமர விடாமல்…. வேலை வாங்கினான்….
அவன் கொடுமைக்கு உச்சம் என்ன என்றால்…. பதினான்காவது மாடி அவள் அலுவலகம் இருக்க… படி வழியாக கீழே அனுப்பி பார்சல் வாங்க வைத்தான்… இத்தனைக்கும் அங்கு போஸ்டல் பிரிவு இருந்தும் அனைத்திற்கும் அவளையே ஏவினான்…..
அக்கடா என ஐந்து நிமிடம் கூட அவளுக்கு ஓய்வு எடுக்க விடாமல் விரட்டி விரட்டி பந்தாடினான்….
அதில் வேறு அவள் தனியாகக் கிடைக்கும் போது…. ஜெய் சில்மிஷம் செய்யத் துவங்கியது தான் மதுராவை பௌர்ணமியில் பொங்கும் அலை கடலாகப் பொங்க வைத்தது… எனலாம்…
அந்தி சாயும் அழகிய பொன் மாலை நேரம்….அனைவருக்கும்
ஆனால் அவளுக்கு…..
வேலை நேரம் முடிந்து கிளம்ப எண்ணியவளை அழைத்து….
“நாளைக்கு மீட்டிங்கிற்கு கொண்டு போக வேண்டிய டாக்குமெண்ட்ஸ் உன்கிட்ட தான இருக்கு, அதை ரெடி பண்ணி கொடுக்க சொன்னேன், எங்கே அது..??” என அதிகாரமாக கேட்க….
அவள் தன் கையை திருப்பி பார்த்து, “என் நேரம் முடிஞ்சுது சார்….!!” என தெனாவேட்டாக நிற்க….
அவளை இகழ்ச்சியாக பார்த்தவன்….
“ஓ… யா… என் தப்பு தான் எதையும் மதிக்காமல் பாதியிலேயே விட்டுட்டு ஓடிப் போறவளை நம்பி இந்த கம்பெனியின் எதிர்கால ப்ராஜெக்ட்டை கொடுத்தது…. உனக்கு போய் சிபாரிசு பண்ணான் பாரு அந்த ஜெடன் முட்டாள்…… இடியட்.. யூஸ்லெஸ் பெல்லொஸ்….!!” என ஜெடனை திட்டி கொண்டே அவனுக்கு அழைப்பு விடுக்க….
பொங்கினாள் பூமி தேவி…. “நானே பண்றேன் சார்!!” என காரமாக கூறி விட்டு…. அவள் இருக்கைக்கு சென்று தன் கைப்பையை கோபமாக தூக்கி வீசி விட்டு அமர்ந்து அவள் வேலையை பார்க்க….
“பன்னி எருமை…. எப்படி பேசுறான் பாரு…. என் டைம் முடிஞ்சுடுச்சு தான சொன்னேன்…. அப்படி எதை நான் பாதையிலேயே விட்டு ஓடினேன்??” என கடுகடுத்தபடி டைப் பண்ணியவாளின் வெண்டை விரல்கள் அந்தரத்திலே நின்றது….
மூச்சு அடைத்து மொழிகள் அற்ற மௌனத்தை தழுவினாள்…. குற்ற உணர்வில்.
அவன் கூறிய வார்த்தைகள் சரியாக வேலை செய்தது….
ஆனால் புரிய வேண்டிய சாம்புராணிக்கு தான்…. அவன் எதார்த்தமாக சொன்னது கூட தனக்கு தனாவை நினைவு படுத்துகிறது என அவன் சொல்லியதை ஒதுக்கி விட்டு வேலை தொடங்கினாள்…..
இவள் கொஞ்சம் விவரமாக இருந்திருந்தால் தான் வந்தது யார் என்று கண்டுபிடித்து இருப்பாளே…
இவள் இப்படி அரைவேக்காடாக இருந்தாள்… அவன் வைத்துச் செய்வதில்… என்ன தவறு…
“எதையும் யோசிக்காமல் அவள் எடுக்கும் முடிவு அவளை விட அவளைச் சார்ந்தவர்களுக்குக் காயத்தைத் தருகிறது என்பதைப் புரிய வைக்கத் தானே வந்து இருக்கிறேன்…!!” என கணினி முன்பு சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளைப் பார்த்தபடி நின்றான் தனஞ்ஜெயன்….
அவள் வேலை செய்யத் துவங்கிய சிறிது நேரத்திலே… ஜெடன் அவளோடு இணைந்து கொள்ள… அங்கே வந்த ஜெய்
“ஜெடன் உங்களுக்குக் கூட இருந்து ஹெல்ப் பண்ணுவார்… இருந்து பண்ணுங்க…. எக்ஸ்ட்ரா ஹவர் ஒர்க் பார்த்தால்… எக்ஸ்ட்ரா பெனிபிட் இருக்கு…. அது மட்டும் இல்லை இந்த கம்பெனியின் எதிர்காலம் உங்கள் கையில் இருக்கு மிஸ்ஸ்ஸ்ஸ்..…????” என வேண்டும் என்றே இழுத்து…
“மிஸஸ் மதுரா தனஞ்ஜெயன்…!!” என அவள் குரல் மிடுக்காகச் சொன்னது…
அது அக்னி குளத்தில் வீசும் குளிர் காற்றாக அவனுக்கு வீச.. அழுந்த மூடிய இதழ்களுக்கு இடையில் மெல்லிய புன்னகை வந்தது…. அதை மறைத்துக்கொண்டு….
“ஓ ஓகே மதுரா, நீங்க ஒர்க் பாருங்க, நான் கொஞ்சம் வெளிய வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்துடறேன்…” என வெளியே போனவன்…. சொந்த வேலைகளை முடித்துவிட்டு….. தேனிக்கு அழைத்துத்தான் பத்திரமாக வந்து விட்டதையும்…. நிரஞ்சனையை அவன் மேல் படிப்புக்கு அனுப்பி வைத்ததையும்…. மதுராவைப் படுத்தும் மட்டும் கூறாமல் மற்றதைப் பேசிவிட்டு வைத்தவனுக்கு…..
அடுத்து அடுத்து செய்ய வேண்டியதை திட்டமிடத் தொடங்கினான்….
கழுத்தை நெட்டி முறித்துக்கொண்டு நிமிர்ந்த மதுரா…. அவள் டைப் செய்ததை கையில் வைத்துச் சரிபார்த்துக்கொண்டு இருக்க….
அப்போது உள்ளே வந்த ஜெய் அவள் அருகே சென்று டாக்குமெண்ட்டைச் சரி பார்த்தவன்…
எதையோ அவளுக்குச் சுட்டிக்காட்ட நினைத்து குனிய….
அவன் கண்களுக்கு நேராக அவள்… செர்ரிப் பழ இதழ்கள் மினுமினுக்க அவனை முத்தமிட அழைக்க….
அருகில் ஜெடனைத் தேட அங்கு அவன் இல்லை என்றதும்…
சற்றும் யோசிக்காமல் கவ்விக்கொண்டான்… அவள் இதழ்களை….
இதை எதிர்பாராத மதுரா அதிர்ச்சியின் உச்சிக்குச் சென்றவள் உறைந்து இருக்க…. அதைப்பயன்படுத்தி அவள் கழுத்தை வளைத்து நெருக்கிப் பிடித்து வன்மையாக அவள் இதழ் அமுதை பருகினான்….ம்ம்ம்ம்….
மூச்சு முட்ட நினைவுக்கு வந்தவள்… அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டு…. அவனை அடிக்க எதுவும் கிடைக்குமா எனத் தேடி…. அருகில் இருந்த கணமான நோட்டுப் பேடை எடுத்து அடிக்கப் போக….
அங்கு ஜெய் இல்லை, அவனுக்குப் பதில் ஜெடன் இருந்தான்…..
“ஹே… மது என்னை அடிக்கப் போறியா…?” என அலற, குழம்பியவள் சுற்றிலும் ஜெய்யைத் தேட அவன் அங்கு இல்லை…. என்றதும்…
“ஆஆ… திரும்பவாமா…!!” என நினைத்துக்கொண்டு….
“உன்னை இல்லை ஜெடன், இங்க ஒரு ஈ இங்கயே மொய்த்துக் கொண்டிருந்தது, அதை அடிக்க எடுத்தேன்….!!” என கூறி சமாளித்தாள்….
பின்னே அங்கே இல்லாத ஜெய் தன்னை முத்தம் இட்டான் என்று சொன்னால்…. எவனும் நம்பத் தேவை இல்லை. அவளுக்கே தெரிந்து விட்டது…. தனக்கு கிறுக்குப் பிடித்து விட்டது… என்று…
அப்பொழுதுதான் உள்ளே வந்த ஜெய்யை கண் சிமிட்டி சிமிட்டிப் பார்த்தவள்….
தலையை இரு கைகளால்… தாங்கிப் பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டாள் மதுரா……
“ஐயோ கடவுளே எனக்கு என்னதான் ஆச்சு… தெரியலையே… கண்ண மூடித் தூங்கினால் தான் கனவு வரும்… முழித்துக்கொண்டு வேலை செய்யும் போது கூட வருது…. ஒருவேளை இந்த ஆபீஸ்ல இருக்குறதால தான் நமக்கு இப்படி ஆகுதோ…. இங்க ஏதோ நடமாடுதோ….!!” என பயந்து போனவள்…..
ஜெடனை கூடவே உஷாராக அழைத்துக்கொண்டு ஜெய் அறைக்குச் சென்று டாக்குமெண்ட்டைக் கொடுத்துவிட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடிச் சென்று விட்டாள்….
அவள் தலைதெறிக்க ஓடுவதைப் பார்த்து… தனஞ்ஜெயன் சிரித்தான்..
“என்ன…??” என கேட்ட…. ஜெடனுக்கு ஒன்றும் இல்லை என்றவனும் அலுவலக வேலை முடித்துவிட்டு கிளம்பி இருந்தான்….
பாவம் ஓடும் அவளுக்கு இன்னைக்கு ஷாக் இன்னும் ஸ்டாக் இருக்கு என்பதை எப்படிச் சொல்வேன்…..
லிஃப்டிலும் கூடச் செல்ல பயந்து படிக்கட்டு வழி ஓடும் அவளுக்கு எங்கே தெரியப் போகிறது….
ஒரே நாளில் அவள் பாதி எடையைக் குறைந்து விட்ட உணர்வு…. கை கால் எல்லாம் அக்கு அக்காகக் கழண்டு விழும்… அளவுக்கு வேலை.. வாங்கி இருந்தான்… வீட்டிலாவது போய் கொஞ்சம் நிம்மதியாக ஓய்வு எடுப்போம்… என ஆசையாகச் சென்றவளை…
அவனாக அவளைப் பாவம் என்று பார்த்துவிட்டால் தான் உண்டு என்னும் அளவுக்கு அவளை வச்சி செய்யப் போகிறான்… அதற்கு அலுவலகம் மட்டும் போதுமா… என்ன…?? ஹாஹா அதே அதே… அவனின் அடுத்த இலக்கு… அவள் வீடு… ம்ஹும்.. அவள் வசிக்கும் தனஞ்ஜெயன் வீடு…
விடாது கருப்பு போல் தொடர்ந்து வரும் ஜெய்யை மதுரா எவ்வாறு சமாளிக்கப் போகிறாள்… என்பதை…
அடுத்த சரவெடி எபியில் பார்க்கலாம் மக்களே….



