ஹை வோல்டேஜ் மின்சாரம் தாக்கியது போல் உறைந்து போய் இருந்தாள் மதுரா….
“என்ன என்ன சொல்லிட்டு போனான்…?” என பூமிக்கு புதிதாக வந்த குழந்தை போல் முழித்தாள்….
அவளுக்கு புத்தி எங்கே வேலை செய்தது….
ஜெய் என்ற பெயரில் வந்து நின்ற தனஞ்ஜெயனைப் பார்த்து உண்மையிலேயே மயங்கி விழுந்து இருந்தாள்….
அவன் தண்ணீர் ஊற்றியதும்…. குளுமையில் வெகுண்டு எழுந்தவளிடம் ஏதோ சொல்லிவிட்டுப் போய் இருந்தான்…. ஆனால் அது ஒன்றுமே அவளுக்குத் தான் புரியவில்லை….
ஜெடன் “இப்போ அந்த தடியன் என்கிட்ட என்ன சொல்லிட்டு போனான்…!” என்று தவித்தபடி வினவ….
“மது.. உனக்கு என்ன ஆச்சு… அவர் தான் நம்ம எம்.டி.. ஜெய்….!” என அவளைக் குழப்பமாகப் பார்த்த ஜெடன்….
“எது ஜெய் சார்…?? எம்.டி..??? டேய் அவன் ஊர் காட்டன், என் மாமன்டா…. இப்போ கூட நான் மயங்கி விழுந்ததற்கு என் மூஞ்சில எப்படி தண்ணிய ஊத்திட்டுப் போய் இருக்கான்… பாரு… இன்டிசன்ட் பெல்லோ…!!” என அவள் ஈர முகத்தைக் காட்ட…. அவளை ஏற இறங்கப் பார்த்தவன்….
அவர் வந்ததுல இருந்து அங்க தான் நின்னு இன்ட்ரோ கொடுத்துட்டு இருக்கார்… மது, அது மட்டும் இல்லை இங்க ஏசி இல்லாததால உனக்கு வேர்த்து இருக்கலாம்…. ஆமா, நீ எப்போ மயங்கி விழுந்த…?? என்னாச்சு உனக்கு? எதுக்கு இப்படி உளறிட்டு இருக்க…. ‘ஆர் யூ ஆல்ரைட்’ என்றவன்….?? அவளை பைத்தியம் போல் பார்க்க….
எப்போ மயங்கி விழுந்தேனா..??? டேய் சேப்பங்கழங்கு தலையா…. நான் இவ்வளவு சொல்றேன் நம்ப மாட்டியா? அவன் என் மாமா தான்… இரு, உனக்கு நிரூபிச்சி காட்டுறேன்…!!… என அவளை பைத்தியமாகப் பார்ப்பதை தாங்க முடியாத ஆதங்கத்தில்…. ஜெய் நோக்கிச் சென்றாள்….
அனைவரின் முன் ஆறடி உயரத்தில் கட்டுமஸ்தான கட்டிளம் மேனியை கச்சிதமாக அந்த கோட் சூட் ஆடை எடுத்துக்காட்ட… கையில் தாங்க காப்புக்கு பதில் ரோலக்ஸ் வாட்ச்… ஜெல் போட்டு படியவைத்த தலை…. என நின்று நுனி நாக்கில் ஆங்கிலத்தை வெளுத்து வாங்கும் இவனா??
படியாத தலை, வெள்ளை வேட்டி சட்டை, கையில் தங்கக் காப்பு, முகத்தில் கோபம் என வலம் வந்தவன் அவனா…??? அவனா இவன்…?? இல்லை இவன் தான் அவனா…??? என குழம்பி நின்றாள்…
அதற்குள் மீட்டிங்கை முடித்து அனைவரையும் அனுப்பி வைத்தவன்…
தன்னை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அவளைச் சொடக்கிட்டு அருகில் அழைத்தவன்…
ஆங்கிலத்திலே என்ன கேட்க…
“ஆ..ன்… இல்லை தேனி… உத்தமபாளையம் தான் உங்க ஊரா… சீ இல்லை அங்க போய் இருக்கீங்களா…?” அவளுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்பது புரியாமல் கேட்க…
“வாட் கம் அகைன்…!!” புரியாதவன் போல் கேட்க…
“இல்லை சார்… உங்கள மாதிரி எனக்கு மாமா… நீங்க அப்படியே… இங்க ஆனா கோர்ட்… இங்கிலிஷ்… கம்பெனி…” என வாய்க்கு வந்ததை உளற அவளுக்கே தெரிந்தது… தான் நன்றாகச் சொதப்புகிறோம் என்று…!!
உனக்கு என்ன பத்தி தெரியணுமா…. ஓகே ஐ காட் இட்… உனக்கு என்ன பார்த்ததும் பிடிச்சி போச்சு அதான்…. எதை எதையோ பேசி என்ன ப்ராக்கெட் போடாற… ரைட்… எனக்கும் ஓகே தான், இவ்ளோ அழகான பொண்ணு வந்து கேட்டா யார் நோ சொல்லுவா…. வா டேட் போலாம், இன்னைக்கு ஒரு நைட் கூட இரு பண்ணலாம்… பிடிச்சா லிவிங் டுகெதர் வாழலாம்……..!! என ஏதோ காபி சாப்பிட அழைப்பது போல் அழைத்து விட்டு அவளை அணைக்க போக….
யோவ்…யோவ்… அங்கேயே நில்லு! ஏதோ…. தெரிஞ்ச மூஞ்சி மாதிரி இருந்தச்சு…. நம்ம ஊர் காரணமா இருப்பியோணு கேட்டதுக்கு கூட வரியா கேக்குற…. இதே எங்க ஊரா இருந்தது… பாண்டியன் பிரதர்ஸ்…. உன் தோலை உரிச்சு போட்டு இருப்பாங்கடி…. போயா லூசு…!! என அவனை தள்ளிவிட்டு வெளியே…
பொறுக்கி, பொறுக்கி எப்படி பார்த்த உடனே படுக்க கூப்பிடறான்….ராஸ்கல்..*. சே…. என் ஹிட்லர் மாமா கொஞ்சம் ரூல்ஸ் பேசுவார்…. தான்…கை கூட கண்டபடி நீளும்…ஆனா பொண்ணுங்கள தெய்வமா மதிப்பார்…..!!
அப்போ ஃப்ர்ஸ்ட் நைட்ல பாயிந்தாரே அது..?? என அவள் மனம் இடித்து உரைக்க….
அவர் பொண்டாட்டி உரிமைல அப்படி நடந்து இருப்பார், அவரை இந்த பொம்பளை பொறுக்கி….கூட சேர்த்து வச்சி பாக்குற….!!
மனதை குத்திக்கொண்டே போக எதிரில் ஜெடன் வந்தான் ….
அவன் இவளிடம் வந்து “என்ன மது, ஜெய் சார் உன் மாமா தான…?” என கேட்க…
“சே…சே! அந்த பொறுக்கி என் மாமா இல்லை… இது வேற யாரோ தான் போல. நான் தான் கண்டதையும் கற்பனை பண்ணி குழப்பிக்கிட்டேன்…!!” என கூற…
“அதைத்தான் மது நானும் சொன்னேன்…. நம்ம ஜெய் சார் எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா…. பொண்ணுங்க எல்லாம் காசுக்காக அவர் மேல போய் விழுவாங்க, ஆனா நம்ம ஜெய் சார் அவங்கள டீசென்ட்ஆ அணுகுவார் தெரியுமா…. ஹி இஸ் எ ஜெம்….!!” என ஜெடன் கூற….
மதுராவிற்கு…. இன்னொரு முறை மின்சாரம் தாக்கியது போல் இருந்தது….
பின்னே இப்போது தானே அவளிடம் தவறாக பேசி நடக்க முற்பட்டான்…
அதை இவனிடம் சொல்லலாம் என்று பார்த்தால்…. என்றால்… எங்கே அவன் நம்பாமல் போனால்…. நிரூபிக்க ஆதாரம் கூட இல்லையே… ஆதாரம் இல்லாமல் பேசி மீண்டும்…. அவளை பைத்தியம் என நினைத்தால் கூட பரவாயில்லை… அவளையும் அந்த வழிசல் கேஸ் என நினைத்து விட்டால்…
அவளுக்கு ஏனோ ஜெடன் அவளை தவறாக நினைப்பது கூட பிடிக்கவில்லை…..
“ஓ அப்படியா..” என்றவள் சோர்ந்த முகத்துடன்… ரெஸ்ட் ரூம்… நோக்கிச் செல்ல…
அதை அலுவலக ஜன்னல் வழியாகப் பார்த்த ஜெய்… “போடி ராங்கி, இது சும்மா ட்ரைலர் தான், இனி இருக்குடி கச்சேரி…!!” என அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்க….
அப்பொழுது அவனைப் பார்த்த ஜெடனும்… ஒருவரை ஒருவர் பார்த்து…. அர்த்தத்துடன் தலை அசைத்துக் கொண்டனர்….
ரெஸ்ட் ரூம்க்குள் சென்ற மதுரா….
பண்ணிய முதல் வேலை நிரஞ்சனுக்கு அழைத்தது தான்….
அவன் எடுக்க மாட்டான் என்றுதும் விடாமல் அழைப்பு விட்டு போனை கதற விட்டாள்… இம்சை அரசி…
“எடுக்கல மாமா…. எடுக்கல, என் கைல மட்டும் போது செத்தடா நீ..!!” என… புலம்பி கொண்டே மீண்டும் அழைக்க…
“கெடச்ச தான போடி… நான் எங்க வலை போட்டு தேடுனாலும் கிடைக்க மாட்டேன்…!!” என அவள் அங்கு சொன்ன பதிலுக்கு, இங்கு இவன் மறுமொழிந்தபடி… போனை சைலண்டில் போட்டுவிட்டு லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வர்த்தக பல்கலைகழகத்துக்குள் சென்றான்… கையில் ஏந்திய புத்தகத்துடன்….
தன் வகுப்பறையைத் தேடிச் சென்றவன் மீது, ஒரு வெள்ளை தேவதையாய் மலர் சென்டாக வந்து விழுந்தாள்….
தம்தன நம்தன நம்தன நம்தன…. இளையராஜா பேக்ரவுண்ட் மியூசிக்!
…..அவள் நடனம் ஆடும் நயணத்தில் தன்னைத் துளைத்து நின்றான்…….
பாவம் அவனுக்குத் தெரியவில்லை, விதி வலியது என்று. சின்னப் பூதத்திடம் இருந்து தப்பித்து, பெரிய பூதத்திடம் மாட்டிக்கொண்டு என்ன பாடு படப் போகிறானோ…..
நிரஞ்சனை அழைத்து அழைத்து ஓய்ந்து போனவள்….
அவனுக்கு நான்கு நல்ல வசைகளைத் தந்துவிட்டு… அவள் இருக்கைக்குச் செல்லப் போனவளிடம்….
அவளுக்குப் பணி மாற்றம் குறித்த செய்தியைச் சொல்லி… மீண்டும் ஓர் அதிர்ச்சியைக் கொடுத்தது மட்டும் இல்லாமல்….
அதிர்ச்சிகளின் உச்சமாக… ஜெய்க்கு அவள் தனிப்பட்ட கருத்தரசி என்பதே அந்த மாற்றம் எனக்கூற… மீண்டும் மயக்கத்தைத் தழுவினாள் மதுரா….
தமாஷாக ஆட்டத்தைத் தொடங்கிவிட்டான்… இனி மதுராவுக்கு இரு பக்கமும் மத்தளம் கொட்டும் கச்சேரிக்கு பஞ்சமில்லை…
*



