காதல் செய்யாதே இராவணா-33

சில வருடங்கள் கழித்து…

நீ எதிர எதிர நடக்கயில, ஆஆஅ 

நீ எதிர எதிர நடக்கயிலா 

ஏழுமலையான் தரிசனம் டா சாமி 

நீ பக்கம் பக்கம் நின்னா அந்த 

பரமேஸ்வரன் போல தோண சாமி 

நீ இல்லாம நான் போகும் பாதை 

கல்லும் முள்ளும் குத்துதுடா 

சாமி … என் சாமி 

என் சாமி … வாயா சாமி 

மன்மத சாமி … மந்திர சாமி 

போக்கிரி சாமி 

என் சாமி (சாமி )

வாயா சாமி (சாமி )

மன்மத சாமி … மந்திர சாமி 

போக்கிரி சாமி 

என்ற பாடலுக்கு ஆடி கொண்டு இருந்தது ரஷ்மகா இல்லை மக்களே நம் ரீல்ஸ் மன்னி மகிழினி அவளுடன் சேர்ந்து அல்லு அர்ஜூனை மிஞ்சும் முக பாவனையில் நம் ரீல்ஸ் நாயகன் ராவணன்..

என்னடா பண்ணி வச்சி இருக்கீங்க எங்க ஹீரோவை நீங்க கேக்குறது புரியுது வாட் டு டூ மக்களே

நூறு லைக்ஸ் கூட தேராத ரீல்ஸ் நாயகிக்கு இப்போது ஒரு மில்லியன் லைக்ஸ், சும்மா பிச்சிகிச்சுது…!!! தனியாக ரீல்ஸ் பண்ண மகிழுக்கு கிடைக்காத லைக்ஸ் எல்லாம் ராவணனுடன் சேர்ந்து ஜோடியாக போட்ட ரீல்ஸுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது… அதிலும் நம் ராவணனுக்கு ரீல்ஸுக்கு ஏற்ற முகபாவனையுடன் போடும் வீடியோக்களுக்கு பெண் விசிறிகள் ஏராளம்…

அதுவும் மதுரை மாநகருக்கு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்ற பின் அவனது அதிரடிகளுக்கு பஞ்சமேது.. அதில் அவன் தவறுகளை தட்டி கேட்கும் வீடியோக்கள் அதிகமாக வலைத்தளங்களில் வலம் வருகின்றன..

மகிழினிக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு, குழந்தைகளை பராமரிப்பதற்காக தன் வங்கி வேலையை விட்டுவிட்டாள்.

நாயகி ஆல்வேஸ் பிஸி தான். தன் சீட்டை தனியாக பிடிப்பதே அரிதாக இருக்க, குழந்தைகளை சிவசங்கரனிடம் விட்டுவிட்டு அவளை காபி ஷாப் போட அழைத்து வந்துவிடுவான்.

“அத்தான்..!!” என மன்னவன் மார்பில் தஞ்சமடைந்த பாவையின் முக வடிவை அளந்த வண்ணம் இருக்க…

“சொல்லு சிட்டு…!!”

“அத்தான் அபிய இப்போதான் குட்டியா பார்த்த மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்டா. பாருங்க எல்லா விளையாட்டு போட்டியிலும் முதல் பரிசு வாங்கி குவிக்கிறா. அவளுக்கும் உங்கள மாதிரியே போலீசா வரணும்னு அவ்வளவு ஆசை…!!” என அன்னையின் பூரிப்புடன் சிலாகிக்க…

ம்ம்ம்…மாறனும், வேந்தனும் கூட அவளைப் பின்பற்றி எல்லா விளையாட்டுலயும் பங்கு எடுக்குறாங்க… வெற்றியோ தோல்வியோ எதைப் பத்தியும் யோசிக்காம முதல்ல பங்கெடுக்கனும் அதுதான் வெற்றி அடைய முதல் தகுதி.. இப்போ ஏன்டி பிள்ளைங்கள பத்தி பேசி மனுஷன சோதிக்கிற… இதுக்கா அவங்கள கழட்டி விட்டுட்டு உன்ன தள்ளிட்டு வந்தேன்… சிட்டு அத்தானை கவனிடி..!!!” என அவனின் கைகள் பிள்ளை பேரால் பருத்த இடுப்பு சதையில் சறுக்கி விளையாட…

சீ போங்க அத்தான்.. உங்களுக்கு அலுக்கவே மாட்டேங்குது…!” என வாய் சலித்துக் கொண்டாலும் செயல் கணவனுக்கு ஒத்துழைப்பதாகவே இருந்தது…

வளவனின் வீட்டின் முற்றத்தில் வயது வாரியாக மூன்று ஆண்கள் வரிசையாகத் தங்கள் காதுகளைப் பிடித்துக்கொண்டு நின்று இருந்தனர். அவர்களைப் பார்த்து ராவணனின் மக்கள் செல்வங்கள் வாய் பொத்தி சிரித்த வண்ணம் இருந்தனர்.

முதலில் நின்ற சிவசங்கரன் “என்ன” எனக் கண்களால் அடுத்து நின்ற வளவனை வினவ, அவன் “தனக்குத் தெரியாது” என உதட்டைப் பிதுக்க, அவர்கள் இருவரும் கடைசியாக நின்ற அவன் மைந்தன் விதுரனிடம் கேட்க, அவன் தன் தோள்களைக் குலுக்கி, “தெரியாது” என்க.

“அங்க என்ன பார்வை? என்ன கேளுங்க, நான் சொல்றேன்…!!” என நிறைமாத வயிற்றைத் தள்ளிக்கொண்டு அசைந்து வரும் ரத்தினத் தேராக வந்து நின்றாள் சாம்பவி.

“இப்போ என்னம்மா பண்ணோம்… எங்களை இப்படி நிக்க வச்சிருக்க…!!” என்ற வளவனை கண்களாலே அடக்கியவள்…

என்ன பண்ணலைன்னு கேளுங்க, இவன் பண்றது எல்லாம் அராத்து வேலை. ஊர்ல ஒருத்தரை விடறது இல்ல… யாராவது அபியை ஏதாவது சொன்னா அவங்கள அடிச்சு வச்சிடுறான். நேத்து அபி விளையாட போன இடத்துல எவனோ ஏதோ சொல்லிட்டான்னு இவனை விட பெரிய பையனை அடிச்சிட்டு வந்து இருக்கான்…

அதுக்கு ஏன் என்னை இப்படி நிக்க வச்சி இருக்க? அவன்தானே தப்பு பண்ணான்…!! என அம்மாஞ்சியாக வினாவினான்.

என்ன பண்ணலை நீங்க… ஹான், அவனுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைக்கிறதே நீங்கதான்… அப்போ உங்களுக்கும் சேர்த்துதான் தண்டனை கொடுக்கணும்…!! என மனையியல் சட்டம் பேசும் மனையாளை பார்க்க…

அது சரி..!! நீ பண்ணாத சேட்டையையா உன் புள்ள பண்றான்…!! ம்ஹும் இத கேட்டா பிள்ளையை கெடுக்கிறேன்னு உக்கி போட விடுவா… நமக்கு எதுக்கு வம்பு…!! என அவன் மனதுக்குள்ளாக மட்டுமே எண்ண முடிந்தது..(தேறிட்ட… இந்த தெளிவும் சிந்தனையும் உன்னை எங்கோ கொண்டு செல்லும் போ..)

அவங்க தப்பு பண்ணாங்க நிக்க வச்சி இருக்க என்ன ஏன் மா இப்படி வயசான காலத்துல நிக்க வச்சி இருக்கே…?

என கேட்ட சிவசங்கரனுக்கு…

“உங்களுக்கு சுகர் அதிகமா ஏறி போச்சு, கண்ணுல கூட இனிப்ப காட்ட கூடாதுன்னு டாக்டர் சொன்னாங்கன்னு உங்களுக்கு பார்த்து பார்த்து கோதுமை குருணை, வரகு, சாமைன்னு சமைச்சு போட்டா… எனக்கு தெரியாம விதுரன் கூட சேர்ந்துகிட்டு வெளியில போய் இனிப்பு வாங்கி சாப்பிடறீங்க, உங்கள என்ன செய்ய..!!!” என அவரின் உடல் நலனை கருத்தில் கொண்டு கடிந்த மருமகளைக் கண்டு அடங்கி தான் போனார்…

ஒரு ஆண் உண்மையான அன்புக்கு மட்டுமே கட்டுப்படுவான்… அதே இங்கும் நிஜமாகிப் போனது. சாம்பவியின் உண்மையான அன்புக்கு முன்னால் இந்த மூவரும் கட்டுண்டே நின்றனர்.

“ஷ்.. ஷ்…!!” என விதுரன் வளவனை அழைக்க

“என்னடா..?”

” எப்படியாவது காப்பாத்துப்பா..!!”

“சரி எல்லாரையும் கூட்டிட்டு தோட்டத்துக்கு போ நான் பார்த்துக்கிறேன்…!!”

“ஐ.. சூப்பர் டன் பா…!” என்றவன் சாம்பவி சமையல் அறை நோக்கி செல்லும் சமயத்தைப் பயன்படுத்தி வெளியேற…

பூனை நடையிட்டு மெல்ல உள்ளே சென்றவன்… பின்னாக நின்று சாம்பவியின் மேடிட்ட வயிற்றில் கையிட்டு கட்டி அணைத்தவன்…

உங்க அம்மா வர வர ரொம்ப கோவப்படுறாங்க, குட்டி. சீக்கிரம் வெளியே வந்து அப்பாக்கு சப்போர்ட் பண்ணுங்க, சரியா..!!

“ஆசைதான், என் பொண்ணு என்ன மாதிரிதான் இருப்பா..!!” என்றவளின் கன்னத்தில் முத்தமிட..

“ஆஹ் என்ன பண்றிங்க? வெளிய மாமா பசங்க எல்லாம் இருக்காங்க.. தள்ளி போங்க மச்சான்…!” என தடுத்தவளை…

“அவங்க எல்லாம் தோட்டத்துக்கு போய் அரைமணி நேரம் ஆச்சும்மா… இப்போ என்ன கவனி…!!” என சரசம் பேசியவனை

“என்ன…?? நான் அவ்வளவு சொல்லியும் வெளிய போய்ட்டாங்களா? அவங்கள விட.. ஹா.. ஹ்ம்ம்ம்..!!”.என்றவள் இதழ்களை தன் வசமாக்கினான் மாயவன்…

“விட்டா பேசியே நேரம் கடத்துவ.. வா, உனக்கு புருஷன முந்தானைல முடியுறது எப்படின்னு சொல்லி தரேன்..!!” என்றவன் அவளை தூக்கி கொண்டு பள்ளியறை சென்றான் காவல் ஆசான்..

கட்டிலில் அவளை விட்டதும்.. “ம்ம்.. இதுக்கு மேலையுமா.. மச்சான்..?” என தன் மேடிட்ட வயிற்றை சுட்டி காட்டினாள்…

உன் வாசனையை என் ஆயுள் முழுக்க சுமக்க இது போதாதுடி.!! என்றவன் அவளை ஆராதழுவி கட்டில் பாடம் எடுக்க.. சிறந்த மாணவியாக அவளும் கற்றுக்கொள்ள… இனிமையான இல்லறம் அரங்கேறியது…

காதல் ஒன்றே இல்லறத்தில் மறையாத இன்பத்தை மாறாமல் வாழ்வின் இறுதி வரை கொண்டு செல்லும்… நன்றி வணக்கம்…!!!

ஹே இரு நிறுத்து…!!

என்ன..??

எல்லாரையும் சொல்லிட்டு ராஜதுரை வடிவு ஜோடியை விட்டுட்டியே…!!

அட ஆமால… ஆனா அவங்க இங்க இல்லையே…!

ஐயோ அப்போ எங்க…?

அடேய் அவங்க ஹனிமூன் கொண்டாட “போரா போரா” மலைக்கு போயிருக்காங்க சொல்ல வந்தேன்…

எதே ஹனிமூனா..!!!

ஆம்… ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இளமை காலத்தில் வாழாமல் விட்டதையும் சேர்த்து முதுமையிலும் திகட்டாமல் காதலிக்கின்றனர் இளம் ஜோடிகள். காதலுக்கும் காதலிப்பவர்க்கும் என்றும் இளமையே. என்ன சரிதானே…!!

வாழ்க வையகம்…!!

வாழ்க வளமுடன்…!!!

Leave a Comment

error: Content is protected !!
Scroll to Top